செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

இரவில் பாதுகாப்பான டிரைவிங்குக்கு சில டிபஸ்...

பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது வேகத்தையும்,தூரத்தையும் கணிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன.தவிர,எதிரே வரும் வாகனங்களின்ம முகப்பு விளக்குகளின் வெளிச்சம் நம் கண்களை சில வினாடிகள் இருளாக்கி விடும்.இதனால்,இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன.பகல் நேரத்தைவிட இரவு நேரத்தில்,விபத்துக்கள் மூன்று மடங்கு அதிகம் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


பகல் நேரத்தை போன்று இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சமும்,பார்வை திறனும் கிடைப்பதில்லை.வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமே வெளிச்சத்தை தருகின்றன.இதனால்,இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கணித்து ஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே,இரவு நேர பயணங்களில் டிரைவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படுவதற்கான சில முன் யோசனைகள்...


•கார்களில் இரவு நேர பயணம் செல்வதை பெரும்பாலும்,தவிர்த்து விடுங்கள்.தவிர்க்க முடியாத காரணங்களால் செல்லும்போது,டிரைவர் இருந்தாலும் கார் ஓட்ட தெரிந்த மற்றொருவர் காரில் இருப்பது அவசியம்.அவசர சமயங்களிலோ அல்லது டிரைவருக்கு அயர்ச்சி ஏற்பட்டாலோ மற்றொருவர் காரை ஓட்டலாம்.


•கார்களில் அடிக்கடி இரவு பயணங்கள் செல்லும் தேவை இருந்தால்,வெள்ளை நிற காரில் செல்வது பாதுகாப்பானது.கார் வாங்கும்போதே இதை நினைவில் கொள்ளுங்கள். இரவில் சாலை ஓரங்களில் நிறுத்தினாலோ அல்லது இருளான பகுதிகளில் செல்லும்போதோ பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிறம் கொண்ட கார் தெளிவாக தெரியும்.


•பவர் ஸ்டியரிங் மற்றும் அதிக எஞ்சின் திறன் கொண்ட கார்களை ரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரவில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.


•இரவு நேர பயணத்தின்போது முகப்பு கண்ணாடிகள்,முகப்பு விளக்குகள்,பின்பக்கமுள்ள எச்சரிக்கை விளக்குகளை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.


•முகப்பு விளக்குகள் எதிரில் சரியான திசையில் ஒளிரும் வகையில் பொருத்தி இருக்க வேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு மட்டுமல்ல எதிரில் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.


•மது அருந்திவிட்டு இரவில் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.ஆல்கஹால் தரும் ஒரு சில மணி நேர சந்தோஷம்,ஒரு சில வினாடிகளில் உங்கள் உயிரையே பறித்துவிடக்கூடும்.


•முன்னால் செல்லும் வாகனத்துக்கும்,உங்கள் வாகனத்துக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்து வாகனத்தை ஓட்டுங்கள்.மேலும்,வாகனத்தை பின்தொடரும்போதும்,எதிரில் வாகனம் வரும்போதும் முகப்பு விளக்கை டிம் செயது ஓட்டுங்கள்.


•தொடர்ந்து கார் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள்.குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை காரை நிறுத்தி டீ,காபி அல்லது கூல் டிரிங்ஸ் குடித்து உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.


•எதிரில் அதிக வெளிச்சத்துடனும்,அதிவேகமாகவும் வாகனங்கள் வருவதை உணர்ந்தால்,வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுங்கள்.


நள்ளிரவில் தூக்கம் வருவதாக தோன்றினால்,பார்க்கிங் லே-பை அல்லது மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் காரை நிறுத்திவிட்டு குட்டி தூக்கம் போடுங்கள்.அதன்பின்,முகத்தை தண்ணீரில் நன்றாக கழுவிக்கொண்டு பயணத்தை தொடர்வது நல்லது.


•எதிர் திசையில் வாகனம் வருவது தூரத்தில் தெரிந்தாலும்,முன்னாள் செல்லும் வாகனத்தை அவசரப்பட்டு ஓவர்டேக் செய்ய வேண்டாம்.இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனம் தொலைவு மற்றும் வேகத்தை கணிப்பது கடினம்.இதுபோன்று ஓவர்டேக் செய்வதால்தான் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன.


காரில் இரவு பயணம் செல்லும்போது மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால்,உங்கள் இரவு பயணமும் மகிழ்ச்சியானதாகவே அமையும் என்பதில் எள் அளவும் ஐயமில்லை.

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

உடல் உறு‌ப்புக‌ள் ப‌ற்‌றி.

நமது உட‌லி‌ல் மா‌ற்ற இயலாத ஒரே உறு‌ப்பு ஈர‌ல். ம‌னித உட‌லி‌ல் ‌மிக‌க் குறைவாக உ‌ள்ள தாது மா‌ங்க‌னீ‌‌ஸ்.

உட‌லி‌ல் உ‌ள்ள சுர‌ப்‌பிக‌ளி‌ல் ‌மிக‌ப்பெ‌ரிய சுர‌ப்‌பி க‌ல்‌லீர‌ல். ‌விர‌ல் நக‌ங்க‌ளி‌ல் நடு‌விர‌ல் நகமே வேகமாக வளரு‌ம்.

நா‌க்‌கி‌ல் சுமா‌ர் மூவா‌யிர‌ம் சுவை மொ‌ட்டுக‌ள் உ‌ள்ளன. தலை முடி பக‌ல் நேர‌த்‌தி‌ல் தா‌ன் அ‌திகமாக வளரு‌கிறது.

முதுகெலு‌ம்பு தரை‌யி‌ல் படுமாறு உற‌ங்கு‌ம் ஒரே உ‌யி‌ரின‌ம் ம‌னித‌ன்தா‌ன்.

நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் மன அழு‌த்த‌த்‌தி‌ன் வெ‌ளி‌ப்பாடு என சொ‌ல்ல‌ப்படு‌கிறது.

சரும‌த்‌தி‌ன் அனை‌த்து ப‌க்க‌த்‌திலு‌ம் நு‌ண்‌ணிய துளைக‌ள் உ‌ள்ளன. துளைகளு‌க்கு‌க் ‌கீழே ‌விய‌ர்வை சுர‌ப்‌பிகளு‌ம் அமை‌ந்து‌ள்ளன.

முதலுதவி அளிப்பது எப்படி?


முதல் கட்டமாக, முதலுதவி செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் மூன்று:

1. உயிரை பாதுகாக்க வேண்டும்.
2. நிலமை மோசமாவதைத் தடுக்க வேண்டும்.
3. சீக்கிரத்தில் குணமளிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

எல்லாவற்றையும் விட முக்கியமானது தைரியம். பாதிக்கப்பட்டவர்களை தேற்றி, ஆறுதல் சொல்ல வேண்டும். பயப்படக் கூடாது. தவிரவும் வேறு சில பொறுப்புகளும் உள்ளன.

1. உடனடியாக நிலமையை ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும். பதட்டபடக் கூடாது. தகுந்த மருத்துவ உதவி கிடைக்க உதவ வேண்டும்.

2. தீ விபத்தில் சிக்கி கொண்ட ஒருவருக்கு முதலுதவி அளிக்க வேண்டும் என்றால் முதலில் முதலுதவி அளிக்க முன்வருபவருக்குத் தன்னை பாதுகாக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிறகு பாதிக்கப்பட்டவர், பிறகு அருகில் இருப்பவர்.

3. பாதிப்பின் தன்மையை சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

4. உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர் மீது நம் கவனம் முதலில் திரும்ப வேண்டும்.

5. சம்பந்தப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கோ, வீட்டுக்கோ, மருத்துவரிடமோ அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். தக்க வாகனங்களைத் தயார் செய்ய வேண்டும்-.

6. மருத்துவ உதவி கிடைக்கும்வரை சம்பந்தப்பட்டவருக்கு அருகேயே இருக்க வேண்டும்.

7. நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும்.

எப்படிச் சமாளிப்பது?

நிதானத்துடன், பதற்றமில்லாமல், இவை இரண்டும் மிக மிக முக்கியம். மேலும் சில குறிப்புகள் கீழே,

1. சூழ்நிலையை உணர்தல்
2. பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல்
3. அவசர சிகிச்சை அளித்தல்
4. உதவி பெறுதல்
5. மீண்டு வருதல்


ஆண்களைவிட பெண்கள் அதிகம் தூங்க வேண்டும்


லண்டன் : ஆண்களைவிட பெண்களுக்கு கூடுதல் தூக்கம் தேவைப்படுவதாக இங்கிலாந்து நிபுணர் தெரிவித்துள்ளார்.

லண்டனை சேர்ந்த லாப்பரோ யுனிவர்சிட்டியின் உறக்க ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ஜிம் ஹார்ன். தூக்கம் குறித்து அவர் கூறியதாவது:

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மூளைக்கு ஓய்வு கொடுப்பதுதான் தூக்கம். சோர்வடைந்த மூளைக்கு புத்துணர்ச்சி கொடுப்பதுதான் தூக்கத்தின் முக்கிய பணி. மூளையின் ஒரு பகுதி கார்டெக்ஸ். இது நினைவாற்றல், தகவல் பரிமாற்றம் ஆகிய பணிகளை செய்கிறது. ஆழ்ந்த தூக்கத்தின்போது, இது வேலை செய்வதை நிறுத்திக் கொண்டு பகல் நேர இயக்கத்தை மறுஆய்வு செய்கிறது. எனவேதான், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்களுக்கு இரவில் அதிக நேர தூக்கம் தேவைப்படுகிறது.

பெண்களின் மூளை ஆண்களின் மூளையிலிருந்து மாறுபட்டது. குழந்தைகள், கணவன் என குடும்ப பொறுப்பு மட்டுமல்லாது, அலுவலக பொறுப்புகளையும் பெண்கள் சுமக்க வேண்டியுள்ளது. எனவே, ஆண்களைவிட பெண்களுக்கு அதிக நேர தூக்கம் தேவைப்படுகிறது. சராசரியாக 20 நிமிடமாவது பெண்கள் கூடுதலாக தூங்க வேண்டும்.

நிறுவனத்தின் உயர் பொறுப்பில் உள்ள ஆண்கள் பல்வேறு முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்களுடைய மூளை மிகவும் சோர்வடைகிறது. அவர்களுக்கும் சராசரி ஆண்களை விட கூடுதல் தூக்கம் தேவைப்படுகிறது என்றார்.

கடல் என்றாலே அலை

கடல் என்றாலே மனதுக்குள் இனம் புரியாத ஒரு ஆச்சரியம் அல்லது பய உணர்வு ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும் ஏற்படும். 1070 கி.மீ. நீளமுள்ள தமிழக கடற்கரையில் ஒவ்வொரு தமிழரும் ஏதாவதொரு காரணத்திற்காக சில முறையாவது செல்கிறோம். கால் நனைக்கவோ, பீச்சில் குடும்பத்துடன் அமர்ந்து குதூகலமாக பேசி மகிழவோ, குளிக்கவோ என எதற்கு சென்றாலும் சிறிது கவனக்குறைவாக இருந்தாலும் உங்களுள் ஒருவரை கடலின் அலைகளுக்கு எளிதாக பலியாக்கிவிட்டு வீடு திரும்ப வேண்டியிருக்கும்.
ஒரு சாதாரண நிகழ்வாக ஒவ்வொரு பண்டிகை தினத்திலும் எங்காவது ஒரு கடற் கரையில் ஒரு உயிர் பறிபோய்க் கொண்டே இருக்கிறது. இந்தச் செய்தி தொகுப்புகளை ஆராய்ந்து பார்த்தால் அப்படி இறந்துபோகும் சராசரி வயதினர் பெரும்பாலும் குழந்தை களோ பெரியவர்களோ பெண்களோ அல்ல. அடுத்த கட்ட கனவை மனதில் சுமந்து தன் குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையாய் விளங்கும் இளைஞர்களே அந்த சில நிமிட அமிழ்தலில் ஒட்டுமொத்த வாழ்க்கையையும், தன் பெற்றோரின் கனவையும், அலைகளில் கரைத்து விடுகிறார்கள்.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை எந்த கடற்கரையில் வேண்டுமானாலும் சென்று பாருங்கள். ஏதாவது ஒரு இளைஞர்கள் கூட்டம் கடலில் உற்சாகத்துடன் குளித்து கொண்டு இருக்கும். காணும் பொங்கல், புத்தாண்டு, தீபாவளி, ஆடிப்பெருக்கு என எந்த பண்டிகை தினமானாலும் சரி, புகழ்பெற்ற புனித தலங்களான ராமேஸ்வரம், வேளாங் கண்ணி மற்றும் திருச்செந்தூர் போன்ற இடங்களில் நடைபெறும் திருவிழாக்களாக இருந்தாலும் சரி தமிழரின் ஒவ்வொரு முக்கிய விசேஷங்களிலும் கடற்கரைகளில்தான் பெரும் கூட்டம் கூடுகிறது.
சுற்றுலாவில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் கடலில் குளிக்கும்போது இன்னும் சற்று ஆழமாய் சென்றால் ஏற்படும் சாகச உணர்வுக்காக அலையில் விழுந்து சிலர் உயிரை தொலைக்கிறார்கள். சில மணி நேரங் களுக்குப் பிறகு அதே இடத்திற்கு வருபவர்கள் முந்தைய பலியைப் பற்றி அறியாமல் மீண்டும் இந்த பாதுகாப்பற்ற ஆபத்தான விடுமுறை கொண்டாட்டத்தை தொடர் கிறார்கள். கடல் அலைகளில் சென்று விளையாடும் ஆர்வம் உள்ள அளவுக்கு அதில் உள்ள ஆபத்துகளை தெரிந்து கொண்டு பாதுகாப்பாக இருக்கவும் தெரிந்து கொள்வது அவசியமாகும். எனவே தமிழக கடல் அலைகளின் தன்மையை பற்றியும் உயிர்காக்கும் சில பாதுகாப்பு முறைகளை பற்றியும் பார்ப்போம்.
பொதுவாக கடலில் தொடர்ந்து அடித்துக் கொண்டு இருக்கும் அலைகளின் காரணமாக கடல் நீர் கரைக்கு தள்ளப்பட்டு மீண்டும் இழுக்கப்படுகிறது. இந்த தொடர்ச்சியான நிகழ்வால் மேற்பரப்பில் உள்ள கடல் நீர் கரை நோக்கியும், அடிப்பரப்பில் உள்ள கடல்நீர் கடல் நோக்கியும் ஓடிக்கொண்டு இருக்கும். கடற்கரையில் உங்களை நோக்கி வரும் அலைகளை ரசித்து கொண்டு இருக்கும்போது காலடியில் உள்ள மணல் வேகமாக அரித்து செல்லப்பட்டு கால் மண்ணுக்குள் புதைவதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். அதற்கு காரணம் இந்த அடிப்பரப்பு நீரோட்டமே ஆகும். இதற்கு ஆங்கிலத்தில் அண்டர்டோ கரண்ட்ன்ட்ஸ் (ஞிஙூக்ஷக்சுஞ்ச்ஞு ஷஞிசுசுக்ஙூஞ்சூ) என்று பெயர்.
மேற்பரப்பில் வரும் அலைகளின் சக்தியோடு ஒப்பிடும்போது இந்த அடிப்பரப்பு நீரோட்டம் சக்தி குறைந்தது. எனவே கடற்கரையில் நின்று கொண்டு இருக்கும் ஒருவரை நீண்ட தூரம் ஆழத்திற்கு இழுத்து செல்லும் அளவுக்கு இதற்கு பொதுவாக பலம் இருப்பதில்லை. ஆழம் குறைவான இடத்தில் நிற்கும் நீச்சல் தெரியாத ஒருவரை பெரிய அலை கீழே தள்ளுகிறது என வைத்துக் கொள்வோம். மேற்பரப்பில் தொடர்ந்து வரும் அலைகள் அவரை மீண்டும் எழவிடாமல் தள்ளிவிட்டுக் கொண்டே இருக்கும். அப்போது ஏற்படும் பய உணர்வில் வாய் மற்றும் மூக்கு வழியாக கடல்நீர் விழுங்கப்படுவதால் மயக்கம் ஏற்பட்டு இறக்க நேரிடுகிறது.
பெரும்பாலும் கடலில் மூழ்கி இறப்பவர்கள் நல்ல ஆரோக்கியமான இளைஞர்கள்தானே என்று நீங்கள் கேட்கலாம். கடல் அலைகளின் இயல்பை புரிந்து கொள்ளாமல் அதில் சிக்கி கொள்வதாலேயே நன்றாக நீச்சல் தெரிந்த இளைஞர்கள் கூட உயிரை விடுகின்ற னர் என்பதுதான் உண்மை. எனவே அலைகளின் சில அடிப்படை இயல்புகளை பற்றி பார்ப்போம்.
சாதாரணமாக பார்த்தால் அலைகள் தொடர்ந்து கரையில் அடித்துக்கொண்டு இருப்பது போல்தான் தோன்றும். ஆனால் அலைகள் ஒரு குழுவாகவே எப்போதும் கரைக்கு வரு கின்றன. ஒவ்வொரு குழுவிலும் ஆறு முதல் எட்டு அலைகள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக கரையில் வந்து அடிக்கின்றன. பிறகு ஏறத்தாழ ஒரு நிமிடத்திற்கு அலைகளின்றி இருக்கும் அமைதியைத் தொடர்ந்து அடுத்த அலை கரையில் வந்து மோதும். அடுத்த முறை நீங்கள் கடற்கரைக்கு செல்லும்போது இதை கூர்ந்து கவனித்து பார்த்தால் அலை களின் இந்த குழு அமைப்பு உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். கடலில் குளிக்கும் போது இந்த அலைக்குழுவின் சிறு அலைகளை பார்த்து சற்று ஆழத்திற்கு செல்லும்போது இந்த பெரிய அலைதான் பலமாக அறைகிறது.
இரு அலைக்குழுக்களுக்கு இடைப்பட்ட குறுகிய அமைதியான நிலையை நம் மீனவர்கள் அற்புதமாக கண்டுபிடிப்பார்கள். இந்த துல்லிய கணக்கீட்டு திறனால் அடுத்த அலைக்குழு கரையில் மோதுவதற்குள் வேகமாக படகை தள்ளிக்கொண்டு கடலுக்குள் சென்றுவிடு வார்கள். அதே முறையை பயன்படுத்திதான் கரைக்கும் திரும்புவார்கள். அதனால்தான் ரொம்ப தூரம் கடலில் இருந்து திரும்பி வரும் மீனவர்கள் அலைகள் மோதும் கரைப் பகுதிக்கு வந்தவுடன் சிறிது நேரம் காத்திருந்து லாவகமாக கரையேறுவார்கள். இது இயற்கை அன்னையிடம் அவர்கள் கற்ற ணுக்கமான பாடங்களில் ஒன்றாகும். அந்த சில சாகச நொடிகளில் சிறிய பிழை நேர்ந்தால்கூட படகும், மீன்பிடி வலையும் அலை களால் தூக்கிவீசப் பட்டுவிடும்.
இந்த அலைக்குழு இடைவெளியை கடக்க முயலும்போது நான் உயிர் தப்பிய சம்பவத்தை பற்றி இங்கு சொல்ல விரும்புகிறேன். கடலின் மீது இருந்த ஈடுபாட்டால் 2007-ம் ஆண்டு ராமேசுவரத்தில் இருந்து சென்னை வரை ஒரு சிறு பிளாஸ்டிக் துடுப்பு படகில் தனியாக பயணம் மேற்கொண்டேன். தமிழக கடல் முழுவதையும் நேரில் உணர வேண்டும் என்ற உள்ளுணர்வால் துவங்கிய இந்த பயணம். எனக்கு தெரிந்த சில கடற்சூழல் விஷயங்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டு கடற் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வு பயணமாக அமைந்தது. ஒரு நாளைக்கு பதினைந்து முதல் இருபது கிலோமீட்டர் பயணம் செய்து கடலோர கிராமங்களில் இரவு தங்கி மக்களிடம் பேசி அடுத்த நாள் பயணத்தை தொடர்ந்தவாறு பயணம் செய்து கொண்டு இருந்தேன்.
கோடியக்கரை வரை அமைதியாக இருந்த இந்த பயணம். அதற்கு பிறகு மிக கடினமாக மாறத் தொடங்கியது. அன்றைய பயணத்தின் முடிவில் நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த கிராம கடற்பகுதியில் சுமார் 500 மீட்டர் தூரத்தில் கரைக்கு வருவதற்காக படகை செலுத்திக் கொண்டிருந்தேன். அன்று கடலும் இயல்பைவிட மிக சீற்றமாகவே இருந்தது. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதுபோல நான் புத்தகங்களில் படித்து இருந்ததைவிட அலைகள் மிக பிரமாண்டமாக வந்துகொண்டு இருந்தன. சரியான அலைக்குழு இடைவெளியை கணித்து கரையோரத்தில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் வரச்சொல்லி சமிக்கை செய்தனர். துடுப்பை வேகமாக தள்ளி கரையை நோக்கி வந்துகொண்டு இருந்தபோது திடீரென ஒரு உயரமான அலை எனக்குப் பின்னால் துரத்த தொடங்கியது. அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் அந்த அலை படகை தலைகீழாக தூக்கத் தொடங்கியது. படகு என் கட்டுப்பாட்டை இழந்தபோது அந்த பெரிய அலை தலைகீழாக என்னை படகுடன் கடலுக்குள் அழுத்தியது. படகையும் என்னையும் பிணைத்து வைத்திருந்த கயிறு என் இடுப்பை நன்றாக சுற்றிக் கொண்டது. வாயிலும் மூக்கிலும் வேகமாக மணல் கலந்த தண்ணீர் ஏறிக்கொண்டு இருக்க கவிழ்ந்த படகின் அடியில் தலைகீழாக தொங்கி கொண்டு இருந்தேன்.
நல்ல வேளையாக அடுத்த அலை தாக்கியவுடன் கயிறை அறுத்துக் கொண்டு படகு என்னை விட்டு விலகி சென்றது. சில நிமிடங்களுக்குப் பிறகு கரையை நோக்கி நீந்தி வந்து சேர்ந்தேன். உயிரை காக்கும் லைப் ஜக்கேட் (மிதவை உடை) அணிந்து இருந்ததால் என்னால் சுலபமாக பிழைக்க முடிந்தது. இதுபோன்று முன்னறிவிப்பு இன்றி திடீரென வரும் பெரிய அலைகள் எந்த ஒரு அலைக்குழுவிலும் சேர்வதில்லை. இவற்றை ஆங்கிலத் தில் ஸ்லீப்பர் வேவ்ஸ் என்று சொல்வார்கள். இந்த பெரிய முரட்டு அலை சாதாரண அலைக்குழுக்களைவிட வேகமாக கரையைத்தாக்கும். அந்த சமயத்தில் குளிக்கும் அப்பாவிகளின் பாதுகாப்பிற்கு இந்த முரட்டு அலை எந்த உத்திரவாதமும் தருவதில்லை. மெரினா கடற்கரை, மகாபலிபுரம், புதுச்சேரி மற்றும் கன்னியாகுமரி கடற்கரைகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் இந்த வகை அலையில் சிக்கி இறந்துள்ள சம்பவங் களும் நடந்துள்ளன.
தமிழகத்தின் கடலோரங்களில் உள்ள முக்கியமான சுற்றுலா மையங்களில் அலைகளின் அமைப்பு எல்லா இடங்களிலும் எல்லா மாதங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கரையின் அமைப்பை பொருத்தும் கால நிலைகளை பொருத்தும் இது மாறக்கூடியது. மிகவும் சரிவாக கரைகள் இருந்தால் பெரிய அலைகள் நேரடியாக கடற்கரை வரை வரும். எனவே இவை ஒற்றை அலை கடற்கரைகள் ஆகும். மீனவர்கள் இதை புனுவுக்கடல் என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு மெரினா மற்றும் பாண்டிச்சேரி கடற்கரைகளை சொல்லலாம்.
ஆனால் தமிழகத்தின் வேறு சில இடங்களில் கடற்கரை மிதமான சரிவுடன் காணப்படும். இந்த பகுதிகளில் பெரிய அலைகள் தூரத்திலேயே நின்றுவிடுவதால் கரையை நோக்கி சிறிய மற்றும் நடுத்தர அலைகள் மட்டுமே வரும். மீனவர்களை இதை தரைக்கடல் என அழைப்பார்கள். உதாரணத்திற்கு வேளாங்கண்ணி மற்றும் வேதாரண்யம் கடற்கரையை சொல்லலாம்.
டாக்டர் வே.பாலாஜி, கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர், தஞ்சாவூர்

வியாழன், 12 மே, 2011

இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள்


இதய நலம் பற்றிப் பேசும்போது, உடல் ஆரோக்கியத்தோடு மிக மிக நெருக்கமான தொடர்புடைய உணவுப் பழக்கம் பற்றியும் நாம் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
நமது உடல் நலமும், மனநலமும் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன. நாம் சாப்பிடும் உணவின் தன்மை மற்றும் அளவை அடிப்படையாகக் கொண்டுதான் நம்முடைய வாழ்க்கை அமைந்துள்ளது. எனவேதான் ஆங்கிலத்தில் You are what you eat என்று சொல்வார்கள். அதாவது நீ சாப்பிடும் உணவின் தன்மைத்தான் நீ யார் என்று தீர்மானிக்கிறது என்று பொருள்.
நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களைச் சர்க்கரைப் பொருள்கள் புரதம், கொழுப்புச்சத்து, உயிர்ச்சத்து, தாது உப்புகள் என பலவகைகளாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் இனி விளக்கமாகப் பார்க்கலாம்.
கொழுப்புச் சத்து
கொழுப்புச் சத்து என்பது நீரில் கரையும் இயல்புடையது. அதே சமயம் ஆல்கஹால், ஈதல் போன்றவற்றிலும் கரையக் கூடியது.
கொழுப்புச் சத்துகள்தான் நமது உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கின்றன. எனவேதான் கொழுப்புச் சத்தை ஆற்றலின் பெட்டகம் (Store house of energy)  என்று சொல்கிறார்கள். ஒரு கிராம் கொழுப்புச் சத்தானது 9 கலோரிகள் வெப்ப ஆற்றலைத் தருகிறது.
நமது ஒரு நாளைக்கான கொழுப்புச் சத்து தேவையானது நம் வயது, உடல் அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. தினசரி ஒரு தனி மனிதனுக்கான மொத்தக் கலோரிகள் தேவையில் 10 முதல் 15 சதவீதம், கொழுப்புச் சத்துகளில் இருந்து கிடைக்க வேண்டும். தனி மனிதனின் அன்றாட உணவில் கொலஸ்ட்ராலின் அளவு 150 மில்லி கிராமுக்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும்.
அளவுக்கு அதிகமாகக் கொழுப்புப் பொருள்களை நம் அன்றாட உணவில் சேர்ப்பதால் நமது இதயம் பாதிக்கப்படுவது பற்றியும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாவது பற்றியும் ஏற்கெனவே பார்த்தோம். ரத்தக்குழாய்களில் கொழுப்புப் படிவங்கள் சேர்வதன் மூலமாக மூளைக்குப் போகும் ரத்தத்தின் அளவு குறைந்து ஸ்ட்ரோக் (Stroke) போன்ற ஆபத்தான பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.
கொழுப்பு வகை உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது மூன்று அம்சங்களைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். இந்த வகையான கொழுப்பு முதலில் தேவைதானா என்பதை யோசிக்க வேண்டும். நாம் சாப்பிடப்போகும் கொழுப்பின் தன்மையைப் பார்க்க வேண்டும். இறுதியாகக நாம் சாப்பிடப் போகும் கொழுப்பின் அளவை கவனிக்க வேண்டும்.
தினசரி உணவில் கொழுப்பு வகை உணவுகளைச் சேர்க்கும்போது, செறிவற்ற கொழுப்பையும், செறிவுற்ற கொழுப்பையும் 2: 1 பங்கு என்ற விகிதத்தில் பயன்படுத்துவது நல்லது.
அன்றாட உணவில் செறிவுற்ற கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகளான ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, தேங்காய் எண்ணெய், வெண்ணெய், நெய், வனஸ்பதி, பாமாயில், முட்டை மஞ்சள் கரு, பால், பால் சார்ந்த பொருள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது உங்கள் இதய நலனைப் பாதிக்காத வகையில் மிகவும் குறைவான அளவில் சேர்த்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது.
வனஸ்பதி
தாவர எண்ணெய்களில் ஹைட்ரஜன் அணுக்களைச் செயற்கையாகச் செலுத்தி, அவற்றைச் செயற்கையாக உறையவைத்து உருவாக்கப்படும் கெட்டியான எண்ணெய் வகைதான் வனஸ்பதி. இவ்வாறு தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் Trans fat எனப்படும். நம் நாட்டில் இதன் விலை குறைவாக இருப்பதால் சமையலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் வனஸ்பதியை அதிகம் சேர்த்துக் கொள்வது நம் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
அண்மையில், வனஸ்பதிக்கும், இதய நோய்க்குமான தொடர்பு பற்றி ஆய்வு செய்த உணவியல் வல்லுநர்களும், இதய மருத்துவர்களும், செறிவுற்ற கொழுப்பைவிட மிக அதிக அளவில் இதயத் தமனிகளைச் சிதைக்கும் ஆற்றல் வனஸ்பதிக்கு உண்டு என்று கண்டுபிடித்துள்ளனர்.
எனவே உலகெங்கும் வனஸ்பதியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்க ஒரு இயக்கத்தையே தொடங்கியுள்ளார்கள். இதய நலத்தைக் காக்க விரும்புபவர்களும், ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்களும், அன்றாட உணவில் டிரான்ஸ் கொழுப்பு வகையில் வருகிற வனஸ்பதியைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது இதயத்தக்கு நல்லது.

கடல், உயிரினங்களின் தாய் மடி. விசித்திரங்களின் உறைவிடம்

கடல், உயிரினங்களின் தாய் மடி. விசித்திரங்களின் உறைவிடம். வினோத உயிரினங்களின் புகலிடம். உலகையே தழுவி இருக்கிறது கடல். கரையில் கால் பதித்தவர்க்கெல்லாம் தென்றலால் தாலாட்டி சுகம் தருகிறது. கவிஞர்களுக்கு கற்பனை தருகிறது. வலைவிரிப்பவர்க்கும் வாழ்க்கை தருகிறது. வானுக்கு மேகத்தை பரிசளித்து, வான்மழையாகி நமக்கு வாழ்வளிக்கிறது. வணிகத்திற்கு வழிவிடுகிறது. கோபம் கொண்டால் கொந்தளிக்கிறது. சூறாவளியாய், சுனாமியாய் சுழன்றடித்து சூறையாடி விடுகிறது.
***
அட்லாண்டிக், ஆர்க்டிக், பசிபிக் பெருங்கடல்கள் உலகை சூழ்ந்துள்ளன. இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகியவை இந்தியாவை சூழ்ந்துள்ளன. இதுதவிர குறுகிய பகுதியில் நிலம் சூழ் கடல்கள் அமைந்துள்ளன. காஸ்பியன் கடல், செத்த கடல் (டெட் சீ) போன்றவை நிலம் சூழ் கடல்களாகும்.
கடல் மேற்பரபில் வீசும் வளிமண்டல மாற்றம், புவியீர்ப்பு மற்றும் காந்தசக்தி போன்றவற்றின் காரணமாக கடலில் அலைகள் தோன்றுகின்றன. அலையால் கடல் எப்போதும் சலனபட்டுக் கொண்டே இருக்கிறது.
***

பசிபிக் பெருங்கடல் உலகின் மிகபெரிய கடலாகும். 18 கோடி ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது. உலக பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை சூழ்ந்து கொண்டிருக்கிறது. இது பூமியின் அனைத்து கண்டங்களின் கூட்டு நிலபரப்பை விட மிகபெரியதாகும்.
பசிபிக் கடலில் 2,500 தீவுகள் இருக்கின்றன. இக்கடலில் உலகின் மிக ஆழமான பகுதியான மரியானாட்ரெஞ்ச் இருக்கிறது. இது 10,911 மீட்டர் ஆழமுடையது. இக்கடலின் சராசரி ஆழம் 4,300 மீட்டராகும். பசிபிக் கடல்நீரின் வெப்பநிலை துருவபகுதிகளில் 0 டிகிரிக்கும் குறைவு. நில நடுக்கோடு பகுதிகளில் 29 டிகிரி செல்ஷியஸ்.
***
இந்திய பெருங்கடலின் சராசரி ஆழம் 3,890 மீ (12,760 அடி). இந்து மகா சமுத்திரத்தின் மிக ஆழமான பகுதி ஜாவா அகழியாகும். இதன் ஆழம் 7,450 மீட்டர். இந்தக் கடலில் ஏற்படும் தட்ப வெப்பநிலையால் இந்தியா இருமுறை மழை பெறுகிறது.
அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை வடகிழக்கு பருவ காற்றும், மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தென்மேற்கு பருவக் காற்றும் நல்ல மழையைத் தருகின்றன. அரபிக்கடலில் ஏற்படும் வன்மையான பருவக்காற்றும் மழை தருகிறது.
***
வாணிபம் செய்வதற்கு கடல் வசதியாக இருக்கிறது. அதனால் பொருளாதாரத்திலும் கடலின் பங்கு முக்கியமாகிறது. இந்திய பெருங்கடலானது மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, கிழக்காசியா ஆகிய பகுதிகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் முக்கிய கடல்பாதையை கொண்டிருக்கிறது. இது பெட்ரோலிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சவுதி அரேபியா, ஈரான், இந்தியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்திய பெருங்கடலை ஒட்டிய கரைபகுதிகளில் இருந்தே அதிகமான பெட்ரோலியம் எடுக்கபடுகிறது. இது உலக பெட்ரோலிய எரிபொருளில் 40 சதவீதமாகும்.
***

கடலானது பெட்ரோல் மட்டுமல்லாது மனிதனுக்கு தேவையான பல்வேறு வளங்களைக் கொடிருக்கிறது. உணவுத் தேவையின் பெரும்பகுதியை ஈடு கட்டுவது கடல்தான். மீன்கள், நண்டுகள், கடற்பாசி என பல உணவு பொருட்கள் கிடைக்கின்றன.
மேலும் கடற்கரை மணல்கள் பல்வேறு தாதுவளம் மிக்கவையாக இருக்கிறது. முத்துக்கள், பவளம் போன்ற ஆபரணங்களும் கடலில் இருந்து கிடைக்கின்றன. சங்கு குளிப்பதும் உண்டு. அலையில் இருந்து மின்சாரம் பெறபடுகிறது. நிலத்தில் கிடைக்காத பல்வேறு தாதுக்கள் கடலில் இருந்து எடுக்கபடுகின்றன.
***
உலகில் கடல்பகுதி 70 சதவீதம். 85 சதவீத உயிரினங்கள் கடலுக்குள்தான் வசிக்கின்றன. அவற்றில் பல விசித்திரமானவை. நீலத்திமிங்கலம் உலகில் மிகபெரிய உயிரினமாகும். நீளமான கடல்மீன் ஓர்பிஷ்(6மீ), உயரமான மீன் சன்பிஷ் (4மீ) ஆகும்.
கடல்சுறா மிகவும் விஷமும், வேட்டை குணமும் கொண்டது. தரையில் நடக்கும் மீன் இனமும் இருக்கிறது. அதன் பெயர் மட்டி ஸ்கிபர். பிளாங்டான் என்னும் மெல்லுடலி கண்ணாடிபோன்ற உடல் கொண்டது. மிகக்கொடிய விஷஜந்துக்கள் கடலில் அதிகம். கடற்பாம்புகள் அதிக விஷமுள்ளவை.
***
தட்பவெட்ப மாற்றத்தால் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் ஏற்படுகின்றன. அவை புயலாக, சூறாவளியாக மாறி நிலபகுதியை தாக்கி சேதபடுத்துகின்றன. ஆண்டுதோறும் புயல்களால் லட்சக்கணக்கானவர்கள் இறக்கிறார்கள். பேரலைகளான சுனாமியாலும் நிலம் பேரழிவைச் சந்திக்கிறது. கடந்த 2004-ல் ஏற்பட்ட ஆழிபேரலை 2 1/4 லட்சம் பேரை பலி வாங்கியது.
மனிதனின் தாறுமாறான புழக்கத்தால் கடல் மாசடைந்து வருகிறது. பிளாஸ்டிக் கடலில் கலப்பதால் ஆண்டுக்கு 10 லட்சம் கடல்பறவைகள், ஒரு லட்சம் பாலூட்டிகள், கணக்கற்ற மீன்கள் சாகின்றன. கடற்பயணத்தில் சிந்தும் எரிபொருள், கடலில் கலக்கும் கழிவுகளாலும் கடல் மாசுபடுகிறது. இவற்றாலும் உயிரினங்களுக்கு ஆபத்துதான்!
***

வெள்ளி, 22 அக்டோபர், 2010

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?


உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 - 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.

மாரடைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு?
இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி. கருப்பையா.
மாரடைப்பு என்றால் என்ன?
ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம், ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் வழியாக அனுப்புகிறது. இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன.
சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இதயத்தின் அத்தசைப் பகுதி உணவும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு.
இதய ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது? ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து (Fatty Streak) படிய துவங்குகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது. இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது.
மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?
காரணங்கள் இரண்டு. ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை, மற்றொன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை.
கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள் - புகை பிடித்தல், உயர் ரத்தஅழுத்தம், உடலின் எடை, உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய்.
கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் - வயது, பரம்பரயாக வரும் மரபணுத்தன்மை.
இதுதவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம். ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது. இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இதயத்தின் ரத்தக்குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், இவ்வகை மாரடைப்பு, புகை பிடிப்போர், கொக்கைன் போன்ற மருந்து உட்கொள்வோர், மிகவும் குளிர்வான பகுதிகளுக்கு செல்வோர், மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோரை அதிகம் பாதிக்கிறது.
மாரடைப்பின் அறிகுறிகள்?
மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம்.
சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு "அமைதியான மாரடைப்பு' என்று பெயர்.
இதய வலியின் வெவ்வேறு தன்மைகள்: பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.
சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும். இதற்கு "ஆஞ்சைனா' என்று பெயர்.
நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி. மேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகள்.
டைனோசர்கள் அழிந்தது விண்கற்களாலா?

டைனோசர்கள் பற்றிய செய்திகள் எப்போதுமே ஆர்வத்தை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. சாதாரண மக்களையும் `டைனோசர்களை'ப் பற்றி அறிய வைத்த

திலும், அவற்றைப் பற்றி ஆர்வம் கொள்ள வைத்ததிலும் ஸ்பீல்பெர்க்கின் `ஜுராசிக் பார்க்' படத்துக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. இந்தப் படத்துக்குப் பிறகு, உலகம் முழுவதும் டைனோசர்கள் பற்றி பேச்சாகவே இருந்தது.

பூமியில் சுமார் 1300 வகையான `ஊர்வன' இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான், டைனோசர். ஒரு காலத்தில் இது பூமியின் முக்கிய உயிரினமாகத் திகழ்ந்தது. இவ்வளவு பெரிய உயிரினம் எப்படி அழிந்துபோனது என்பது இன்றைக்கும் புதிராக உள்ளது.
ஏறக்குறைய 650 லட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் உலவித் திரிந்திருக்கின்றன டைனோசர்கள். அப்போது இவைதான் பூமியின் மிகப் பெரிய உயிரினங்கள். மிக அதிகமான எடை, மாறிவந்த காலச்சூழலால் டைனோசர்கள் மடிந்திருக்கலாம் என்று ஒரு கருத்து கூறப்படுகிறது.
ஆனால் 1980-ல் லூயிஸ் அல்வரேஸ் என்ற புவி ஆராய்ச்சியாளர் ஓர் ஆய்வு செய்தார். அதன்படி, 650 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான நில அடுக்குகளில் `இரிடியம்' என்ற தனிமம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பூமியில் மிக அரிதாகக் காணப்படும் தனிமம். விண்கற்களில் இந்தத் தனிமம் அதிகமாக உள்ளது. எனவே, பூமியில் விழுந்த விண்கல்லில் இருந்து இரிடியம் வந்திருக்கக்கூடும் என்று லூயிஸ் கூறினார்.
அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில், பல மைல் அகலம் கொண்ட ஒரு ராட்சத விண்கல், பூமியில் மோதியிருக்கலாம், அந்த மோதலால் டைனோசர்கள் அழிவைச் சந்தித்திருக்கக்கூடும் என்று லூயிஸ் தெரிவிக்கிறார். ஆனால் இன்றைய பறவைகள், டைனோசர்களில் இருந்து பரிணமித்தவைதான். எனவே ஒரு விண்கல் மோதலால் டைனோசர்கள் முற்றிலுமாக அழிந்துபோயின என்பதை ஏற்க முடியாது என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.
ஆக, டைனோசர்களின் அழிவு குறித்த புதிர் முற்றிலுமாக விடுபடவில்லை என்பதே உண்மை.

கடலில் மேயும் பசுக்கள்


டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களை பற்றி தெரிந்துள்ள நாம், தமிழக கடற்பகுதியில் வாழும் மற்றுமொரு அரிய கடல்வாழ் பாலூட்டியான கடல் பசுக்களை பற்றி அதிகம் அறிந்துகொள்ளவில்லை என்றே சொல்லலாம். இதற்கு காரணம் டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களை போல இல்லாமல் கடல் பசுக்கள் மனிதர்களுக்கு சாதாரணமாக தென்படுவதில்லை. ஆங்கிலத்தில் டுகோங் (ஈஞிகீச்ஙூகீ) என்று அழைக்கபடும். இவை தமிழகத்தில் கோடியக்கரை முதல் தூத்துக்குடி வரை உள்ள ஆழம் குறைந்த கடல் பகுதியில் காணபடுகின்றன. மீனவர்கள் இதை `ஆவுரியா' என்று அழைக்கின்றார்கள். இவை வேகமாக நீந்தத் தெரியாத அப்பாவிகள்.

கடல் பசுக்களுக்கும்- டால்பின்களுக்கு இடையே உள்ள முக்கிய வித்தியாசம் முதுகு துடுப்பாகும். டால்பின்களுக்கு இருப்பதுபோல் கடல் பசுக்களுக்கு முதுகு துடுப்புகள் இல்லை. இவை கடலின் மேற்பரப்பில் டால்பின்களை போல் டைவ் அடிபதில்லை. மூக்கை மட்டும் வெளியே நீட்டி காற்றை சுவாசிக்கின்றன. எனவே எளிதில் மீனவர்களின் கண்களுக்கு கூட கடல் பசுக்கள் தட்டுபடுவதில்லை. குணத்திலும் டால்பின்களை விட மிகவும் சாதுவான தன்மை கொண்டவை. இவற்றின் உடல் பழுப்பு வண்ணத்தில், சுமார் மூன்று மீட்டர் நீளம் வரை இருக்கும். உலகின் சுமார் 40-க்கும் மேற்பட்ட வெப்பமண்டல நாடுகளில் கடல் பசுக்கள் வாழ்வதாக ஆராய்ச்சி முலம் தெரியவந்துள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால், கடலில் இருக்கும் பாலூட்டி வகைகளிலேயே தாவரங்களை மட்டுமே உண்ணக்கூடிய முழு வெஜிடேரியன் கடல் பசுக்கள் தான்.
நம் ஊரில் மாடுகள் மேய்வது போல், கடல் பசுக்கள் கடல் அடியில் வளரும் புல்வகை களை மேய்ந்து கொண்டிருக்கும். குறிப்பாக, கடல் புற்களின் வேர்களில் அதிக அளவு ஊட்டச் சத்துக்கள் இருப்பதால், அவற்றை வேருடன் பிடுங்கி அப்படியே சாப்பிடுவதில் கடல் பசுக்கம் கில்லாடிகள். கடந்த வருடம், தாய்லாந்து கடற்பகுதியில் கடலுக்கு அடியில் பயணிக்கும்போது கடல் பசுக்கள் மேய்ந்த தடங்களை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது.
`நம் ஊரில் வயலில் மாடுமேய்ந்த தடத்தை பார்பதை போலவே இருகின்றதே' என்று எண்ணி வியந்தேன். எனக்கு தாய்லாந்தில் உள்ள `திராங்' என்ற ஊருக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆச்சரியமான செய்தி என்னவென்றால், அங்கு உள்ள நகரின் முக்கியமான பகுதியில், அரசியல் தலைவர்களுக்கு சிலை வைப்பது போல கடல்பசுக் களுக்கு சிலை வைக்கபட்டுள்ளது. அந்த நகரின் நினைவாக ஏதாவது பொருட்கள் வாங்க சென்றால் கடல்பசுக்களின் சிறிய பொம்மைகளையே விதவிதமாகத் தருகிறார்கள். அங்குள்ள மக்களிடம் கடல் பசுக்களை பற்றிய விழிப்புணர்வும், அவற்றை பாதுக்காக்க வேண்டும் என்ற எண்ணமும் நிறைய இருக்கிறது.
கடல் பசுக்கள் மனிதர்களை போலவே நீண்ட ஆயுள் கொண்டவை. அவற்றின் பற்களில் உள்ள வளையங்களை கொண்டு வயதை கணிக்க முடியும். உதாரணமாக, ஒரு பெண் கடல் பசுவின் பல்லை ஆய்வு செய்தபோது, அதன் வயது 73 என்று தெரிந்திருக்கிறது. பத்து முதல் பதினைந்து வயதிற்கு பிறகே இவை குட்டி போடும் பருவத்தை அடைகின்றன. குட்டிகள் பொதுவாக 13 மாதங்கள் தாயின் வயிற்றில் வளர்கின்றன.
ஒருமுறை ஒரு குட்டி மட்டுமே போடும் கடல் பசுக்கள் அடுத்தடுத்த குட்டிகளை போட 3 முதல் 7 வருடம் வரை எடுத்து கொள்கின்றன. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், கடல் பசுக்கம் வேகமாக தங்கள் இனத்தை பெருக்குவதில்லை. இந்த இயல்பான குணமே இவற்றின் அழிவுக்கும் காரணமாக அமைந்து விட்டது. சுற்றுசூழல் மாசுபாடு, வேட்டை யாடுதல் போன்ற மனித நடவடிக்கைகளால் வேகமாக அழிந்து வரும் கடல் பசுக்கள், அதற்கு ஈடான வேகத்தில் இனபெருக்கம் செய்வதில்லை. எனவே உலக இயற்கை வளங்களை பாதுகாக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு , கடல் பசுக்களை அழியும் தருவாயில் உள்ள விலங்குகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்திய அரசும் கடல் பசுக்களை வேட்டையாடுவதையோ, உணவுக்காக அதன் இறைச்சியை விற்பதையோ தடை செய்துள்ளது.
கடல் பசுக்களின் இறைச்சி அசைவ பிரியர்களுக்கு பிடித்ததாக இருப்பதால், இந்தியா உட்பட சுமார் 31 நாடுகளில் இவை பல காலமாகவே வேட்டையாடபட்டு வருகின் றன. நம் பகுதி மீனவர்கள் பொதுவாக கடல் பசுக்களை வேட்டையாடச் செல்வதில்லை. ஆனால் மீன்களுக்காக கடலில் போடபடும் வலைகளில் சில சமயம் கடல் பசுக்கள் வந்து சிக்கி கொள்ளும்போது அவை பிடிக்கபடு கின்றன. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத் தி, தமிழக கடற்பகுதியில் கடல் பசுக்கள் வாழும் இடங்கள் பாதுகாக்க வேண்டும். மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள கடற்பகுதி முழுவதும் ஏற்கனவே பாதுகாக்க பட்டுள்ளது. அதை போல பாக் ஜலசந்தி (தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை) பகுதிகளில் உள்ள கடற்பசுக்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சனி, 16 அக்டோபர், 2010


இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் (10)

An Excellent Article,  don't miss it
டாக்டர் ஷேக் சையது M.D  
[ ஒரு மனிதனின் உடல் கோடிக்கணக்கான செல்களின் தொகுப்பாகும். மனித உடலில் இடைவிடாது செல் பெருக்கம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு வினாடிக்கு 12.5 கோடி எனும் விகிதத்தில் செல்கள் புதுபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஒரு நிமிடத்திற்கு 750 கோடி செல்கள் பெருக்கம் நடை பெறுகிறது. அதன் படி ஒரு மணிநேரத்தில் எத்தனை கோடி செல்கள், ஒரு நாளைக்கு எத்தனை கோடி செல்கள் புதுபிக்கப்படும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். டி.என்.ஏ. வில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்திகளில் 3 விழுக்காடுதான் இது வரை அறியப்பட்டுள்ளன மீதமுள்ள 97 விழுக்காடு செய்திகள் இதுவரையும் அறியப்பட வில்லை என்று விஞ்ஞான உலகம் கையை விரிக்கிறது. அவ்வளவு செய்திகளை அதனுள் பதிவு செய்து வைத்தவன் யார்?
திகைப்பூட்டும் இந்த ஆய்வு, இறுதியில் இறை நம்பிக்கையில் போய் முடிகிறது. அறிய முடியாத அந்த 97 விழுக்காடு செய்திகள் அதனைப்பதிந்து வைத்த இறைவனுக்கே வெளிச்சம். இது பற்றி எழுத வேண்டிய செய்திகள் ஏராளம்.
கருச்சிசுவின் பாலினத்தை தீர்மானிப்பது விந்தணுதான் என்ற இந்த அறிவியல் உண்மையும் 1953 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது டி.என்.ஏ. (D.N.A) என்ற துணுக்கினை கண்டறிந்தப் பிறகுதான் இது சாத்தியமாயிற்று. அதற்கு முன்பு வரை இந்த செய்தியினையும் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனாலும் 1423 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவரான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலம் போதிக்கப்பட்ட இறைவேதமான குர்ஆனில் இந்தச் செய்தி தெளிவாகவே சொல்லப் பட்டிருக்கிறது. இந்தச் செய்தியை அவரால் சாதாரண மனிதர் என்ற அடிப்படையில் சொல்லியிருக்க முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது. இந்த டி.என்.ஏ. வையும், அது சார்ந்திருக்கும் குரோமோசோம்களையும் யார் படைத்தானோ, அவனால் மட்டுமே எல்லாக் காலத்திலும் சொல்ல முடியும்.]
கடந்த தொடரில் கரு ஆணாக அல்லது பெண்ணாக இருப்பதற்கு ஒரு பெண் காரணமாக இருப்பதில்லை என்பதைப் பார்த்தோம் இந்தத் தொடரில் அதற்குக் காரணம் ஆண்தான் என்பதைத் தெரிந்து கொள்வோம். கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிப்பது ஆண்தான் என்பதை அறிவியல் ரீதியாக தெரிந்து கொள்வதற்கு முன் சில அடிப்படைத் தகவலை நாம் தெரிந்தாக வேண்டும்.
பரம்பரையின் இரகசியம் அடங்கிய செல்
உயிரினங்கள் அனைத்தும் செல் எனப்படும் நுண்ணிய பகுதியால் ஆக்கப்பட்டுள்ளதாகும். மரம், செடி, கொடி, தாவரங்கள் அனைத்தும் செல்லின் தொகுப்பே. சுருக்கமாகச் சொல்வதானால் உயிரினத்தின் துவக்கமே செல்தான்.
கருவின் நிலையும் இந்த செல்களின் தொகுப்பு என்பதால், செல்லின் செயல்பாடுகள் பற்றியும், அதன் அங்கங்கள் பற்றியும் சற்று தெரிந்து கொள்வது, கருவறையில் சங்கமமாகும் விந்தணு, சினை முட்டை பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கு துணை புரியும்.
மேலும், அங்கு உருவாகும் கருவின் பாலை (Sex) விந்தணு எவ்வாறு தீர்மானிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் உறுதுணையாக அமையும்.
ஒரு செல்லின் சராசரி எடை, ஒரு கிராமின் நூறு கோடியில் ஒரு பகுதியாகும் என்றால், செல் எந்தளவிற்கு நுண்ணியது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதில் சில நிமிடங்கள் மட்டும் உயிர் வாழக் கூடியது, இரண்டு மாதங்கள், பல வருடங்கள், அதற்கும் மேலாக உயிர்வாழக் கூடியது என பல வகையான செல்கள் உண்டு. நாம் மனிதக் கருவியல் பற்றி புரிந்து கொள்ளும் முயற்சியில் உள்ளதால் மனித செல்கள் பற்றிய செய்திகளைத் தெரிந்துகொள்வோம்.ஒரு மனிதனின் உடல் கோடிக்கணக்கான செல்களின் தொகுப்பாகும். மனித உடலில் இடைவிடாது செல் பெருக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு வினாடிக்கு 12.5 கோடி எனும் விகிதத்தில் செல்கள் புதுபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஒரு நிமிடத்திற்கு 750 கோடி செல்கள் பெருக்கம் நடை பெறுகிறது. அதன்படி ஒரு மணிநேரத்தில் எத்தனை கோடி செல்கள், ஒரு நாளைக்கு எத்தனை கோடி செல்கள் புதுபிக்கப்படும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
பழைய செல் செயலிழந்து இறந்து விடும் போது, புதிய புதிய செல்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். நாம் அறியாமலேயே இந்நிகழ்ச்சி நமது உடலில் இடை விடாது தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. இந்த மனித செல்களில் மிகச் சிறியது ஆண் உயிரணுவாகவும், மிகப் பெரியது பெண் கருமுட்டையாகவும் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
செல் அங்கங்கள்முக்கியமாக செல்சுவர், அதனை அடுத்து திரவ வடிவத்திலான சைட்டோபிளாசம், அதில் மிதக்கும் மைட்டோ காண்ட்ரியா, அதன் மையப்பகுதியில் உட்கருவாகத் திகழும் நியூக்ளியஸ் ஆகிய முக்கிய பகுதிகளை அங்கங்களாகக் கொண்டுள்ளதாகும் ஒரு செல். மைட்டோ காண்ட்ரியாவின் பணிகளில் ஒன்று, செல் சுவாசிப்பதற்கு துணை புரிவதாகும்.
இதயம் போன்று விளங்கும் உட்கருவான நியூக்ளியஸ் ஒரு செல்லின் மிக மிக முக்கிய பகுதியாகும். இந்த உட்கரு இன்றி ஒரு செல் தனது பயணத்தை தொடர முடியாது. இந்த நியூக்ளியஸித்திற்குள் மிக சிறிய துணுக்குகளாக புரோட்டின்கள் உள்ளன. இதனை குரோமோசம் என்று கூறப்படும்.
ஒவ்வொரு செல்லினுள் 46 குரோமோசம்கள் உள்ளன. இந்த குரோமோசோமத்திற்குள் தான் மனித வம்ச பரம்பரைச் செய்திகளை உள்ளடக்கிய வளை போன்ற நுண்ணிய துணுக்குகளான நியூக்ளிக் அமிலங்கள் என்று ஒன்று உண்டு. அதனைச் சுருக்கமாக டி. என். ஏ. (D.N.A.) (டி ஆக்ஸிரிபோ நியூக்ளிக் ஆசிட்) என்று கூறப்படும். இது முதன் முதலில் 1953ம் ஆண்டுதான் பிரட்னில் காவண்டிஷ் ஆய்வுக் கூடத்தில் வாட்ஸன் (Watson), க்ரிக் (Crick) ஆகிய இரு உயிரியல் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த டி.என்.ஏ ஆய்வில் மேலும் பல அறிஞர்கள் ஈடுபட்ட போது வியக்கத் தக்க பல கோடி அரிய செய்திகள் அதில் பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.
வம்ச பரம்பரைச் செய்திகள், பின் வரும் வாரிசுகள் பற்றிய செய்திகள், ஒரு மனிதனை வேறுபடுத்தி அடையாளப்படுத்தும் செய்திகள் என வேறுபட்ட பல செய்திகள் அதில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு வெவ்வேறு செய்திகளை குறிப்பிட நியூக்ளிக் அமிலங்கள் கொண்ட பல தொகுப்புகள் இந்த டி.என்.ஏ.வில் உள்ளது. இந்தத் தொகுப்புகளைத்தான் ஜீன் (gene) என்று குறிப்பிடுகின்றனர். கண், காது, மூக்கு, கை, கால், உடலமைப்பு உறுப்புகள் எவ்வாறு எந்த இடத்தில், எந்தெந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிப்பது இந்த ஜீன்தான். முன்னோரின் தோற்றம் வாரிசுகளுக்கு ஏற்படுவதற்கும் இந்த டி.என்.ஏ.வில் உள்ள ஜீன்தான் காரணம்.
கருவில் வளரும் குழந்தை பிறந்து, இறக்கும் வரை அதன் இயக்கம் எவ்வாறு இருக்க வேண்டும், அதன் இரத்த அழுத்தம், பார்க்கும், கேட்கும், விளங்கும் திறன் அனைத்தையும் தீர்மானிப்பதும் இந்த ஜீன்கள்தான். ஒவ்வொரு வயதிலும் எவ்வாறு உடலமைப்பு இருக்கும் என்பதையும் இந்த டி.என்.ஏ.வில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த ஜீன்களின் தீர்மானத்தில் சிறு சறுக்கல் ஏற்பட்டு விட்டால் கூட, கண் இருக்க வேண்டிய இடத்தில் காதும், மூக்கு இருக்க வேண்டிய இடத்தில் வாயும் என மாறிவிடும். மேலும், பல்வேறு பிறவி நோய்கள், பிறவி ஊனங்கள் ஏற்படுவதற்கும், புற்று நோய் தோன்றுவதற்கும் காரணமாகவும் அது அமைகிறது.
இதில் வியப்பு என்னவெனில், டி.என்.ஏ. வில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்திகளில் 3 விழுக்காடுதான் இது வரை அறியப்பட்டுள்ளன மீதமுள்ள 97 விழுக்காடு செய்திகள் இதுவரையும் அறியப்பட வில்லை என்று விஞ்ஞான உலகம் கையை விரிக்கிறது. அவ்வளவு செய்திகளை அதனுள் பதிவு செய்து வைத்தவன் யார்? திகைப்பூட்டும் இந்த ஆய்வு, இறுதியில் இறை நம்பிக்கையில் போய் முடிகிறது. அறிய முடியாத அந்த 97 விழுக்காடு செய்திகள் அதனைப்பதிந்து வைத்த இறைவனுக்கே வெளிச்சம். இது பற்றி எழுத வேண்டிய செய்திகள் ஏராளம். இது அதற்குரிய இடம் இல்லை. எனவே, நமது நோக்கத்திற்கு வருவோம்.
செல் பெருக்கம்செல் பெருக்கம் மனித உடலில் இடையுறாது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று பார்த்தோம். உடலியல் செல், இனவிருத்தி செல் என இருவகை செல்கள் உள்ளன. இந்த இரண்டின் பெருக்கமும் இரு வேறு முறையில் நடைபெறுகிறது.
ஒரு உடலியல் செல் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்ததும் தன்னைத் தானே இரட்டிப்பாக ஆக்கிக் கொள்கிறது. அப்போது, அதன் உட்கருவான நியூக்ளியஸ் குறுக்கு வாக்கில் இரண்டாக பிரிந்து, அதனுள் இருக்கும் 46 குரோமோசோம்கள் 23, 23 என பிரிந்து எதிரெதிராக ஒதுங்கிவிடுகிறது. அப்போது குரோமோசோம்களில் உள்ள டி.என்.ஏ. வானது நீளவாக்கில் பிளந்து கொள்ளும். அதனால் ஏற்கனவே இரண்டாகப் பிரிந்து, ஒதுங்கியிருந்த ஒவ்வொரு 23 குரோமோசோம்களும் நீளவாக்கில் பிளந்து கொள்கின்றன.
நீளவாக்கில் பிரிந்த குரொமோசோம்கள், ஆர்.என்.ஏ. (ரிபோ நியூக்ளிக் ஆசிட்)வின் துணையுடன் எதிர் எதிராக உள்ளதுடன் இணைந்து, இரண்டு தனிச்செல்களாக ஆகிவிடுகிறது. அப்போது ஒவ்வொரு செல்லும் 46 குரோமோசோம்களைக் கொண்டிருக்கும். தாய் செல்லில் இருந்த அனைத்து தகவலும், பிரிந்த செல்கள் இரண்டிலும் ஆர்.என்.ஏ. வின் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கும். இவ்வகையான செல் பெருக்கத்தினை மைடாஸிஸ் (Mitosis) என்று கூறப்படும். அதாவது மிகுதல் பிரிகை ஆகும்.
இனவிருத்தி செல் பெருக்கம்இனவிருத்தி செல் பெருக்கம் இதற்கு சற்று மாறு பட்ட முறையில் நடைபெறும். இனவிருத்தி உறுப்புகளில் உருவாகும் ஆணுயிர் செல்லானது 23 ஜோடி குரோமோசோம்களையும், பெண் கருமுட்டை செல்லானதும் 23 ஜோடி குரோமோசம்களையும் கொண்டிருக்கும். இந்த ஒவ்வொன்றிலும் முள்ள 23 ஜோடி குரோமோசோம்களில் 22 ஜோடியானது வம்சப் பரம்பரைச் செய்திகளை உள்ளடக்கியுள்ளன. இதனை உடற்கூறு குரோமோசோம்கள் (Autosomes) என்று கூறப்படும். இந்த வகைக் குரோமோசோம்கள் தான் பிறக்கப் போகும் சிசுவின் உடல் கூறு இயல்புகளையும், அதன் இயக்கங்களையும், அதன் இயல்புகளையும் தீர்மானிக்கும். 23 வது ஜோடியானது பாலினத்தை (Sex) தீர்மானிக்கும் செய்தியினை உள்ளடக்கி இருக்கும். இதனை பாலினக் குரோமோசம் (Sex Chromosomes) என்று குறிப்பிடுகின்றர். இதில் ஆண் உயிரணுவில் உள்ள 23வது ஜோடியான இனக் குரோமோசம் X, Y என்றும், பெண் கருமுட்டையில் X, X என்றும் இருக்கும். Y என்பது ஆண் பாலைத் தீர்மானிக்கும், X பெண் பாலைத் தீர்மானிக்கும் குரோமோசம் ஆகும்.இந்த 23 ஜோடி குரோமோசம்கள் முதிர்ச்சி அடையும் போது, இரண்டாக பிரிந்துவிடுகிறது. விந்தணுச் செல் இரண்டாகப் பிரியும் போது, 22 உடற்கூறு குரோமோசம்கள் (ஆட்டோசோம்), ஒரு X எனும் பெண் இனக் குரோமோசம் என்ற ஒரு பாதியாகவும், 22 உடற்கூறு குரோமோசம்கள் (ஆட்டோசம்), ஒரு Y எனும் ஆண் இனக் குரோமோசம் என்ற இன்னொரு பாதியாகவும் பிரிந்து விடும். சினை முட்டை செல்லிலும் இதே போன்றுதான் இரு பாதிகளாகப்பிரிந்து நிற்கும். ஆனால், இங்கு இரு பாதியிலும் X எனும் பெண் இனக் குரோமோசம்தான் இருக்கும். இதனை மையாஸிஸ் (Meosis) குன்றுதல் பிரிகை என்று கூறப்படும்.விந்தணுச் செல், சினை முட்டையை அடையும் போது இரண்டிலும் உள்ள பிரிந்த 23, 23 செல்கள் ஒன்றிணையும். அப்போது ஒரு செல்லுக்குத் தேவையான 46 குரோமோசம்களைக் கொண்ட ஒரு செல்லாக வடிவம் பெறுகிறது. இவ்வாறு ஒன்றிணையும் போது விந்தணுச் (ஆணுயிர்) செல்லின் இனக் குரோமோசோம் X ஆக இருந்தால் அப்போது உருவாகும் சிசு பெண்ணாகவும், விந்தணுச் செல்லின் இனக் குரோமோசோம் Y ஆக இருந்தால் அப்போது உருவாகும் சிசு ஆணாகவும் இருக்கும் என இன்றைய மருத்துவ விஞ்ஞானம் கூறிக் கொண்டிருக்கிறது. சினை முட்டை செல்லின் பாலினக் குரோமோசம் எல்லா நிலையிலும் ஒன்றுபோலவே இருக்கும். பாலினத்தை (Sex) தீர்மானிப்பதில் இதற்கு எந்த பங்களிப்பும் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறது. இந்த இடத்தில் இன்னொரு உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, விந்தணுவும், சினை முட்டையும் ஒன்றிணையும் போதே அந்தக் கருவின் பாலினம் என்னவாக இருக்கும் என்பது தீர்மானிக்கபட்டுவிடுகிறது. ஆனால் அதனை உணர்ந்து கொள்ளும் திறனோ, அதனை கண்டு பிடிக்கும் அறிவியல் ஆற்றலோ மனிதனிடம் இல்லை. அது இறைவன் மட்டுமே அறிந்த இரகசியமாக உள்ளது. இந்த இடத்தில், கருவறையில் உள்ளதை அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே! என்ற இறை வசனம் விஞ்ஞானத்தை மிகைத்து நிற்பதை உங்களது மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.செல் தியரிசெல் எனும் வார்த்தைப் பிரயோகமே 1665 ஆண்டிற்குப் பிறகுதான் நடைமுறையில் வந்தது. லியோன் ஹுக் என்பவரால் 1591ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணோக்கியின் (மைக்ரோ ஸ்கோப்) மூலம் உயிரியல் ஆய்வில் ஈடுபட்ட ரோபெர்ட் ஹுக் என்பர், தேன் கூட்டில் உள்ள சிறிய அறைகள் போல உயிரினங்களின் உடலில் நுண்ணிய தடுப்புச் சுவர்கள் கொண்ட சிறிய சிறிய அறைகள் நிறைய இருப்பதைக் கண்டுபிடித்தார். இவற்றைக் குறிப்பிடுவதற்கு அறை என்ற அர்த்தம் உள்ள செல் என்ற வார்த்தையை பிரயோகம் செய்தார். அன்று முதல் இது அறிவியல் வழக்குச் சொல்லாக நடைமுறைக்கு வந்தது.
அவருக்கு பின் வந்த உயிரியல் அறிஞர்கள் பலரும், இந்த செல் ஆய்வினை தொடர்ந்து மேற்கொண்ட போது, மனிதன், விலங்கு மட்டுமல்லாமல், செடி, கொடி தாவரங்கள் அனைத்திலும் இந்த செல் இருக்கும் உண்மையைக் கண்டுபிடித்தார்கள். இதனை முதலில் 1839 ஆண்டு ஸ்வான் என்ற விஞ்ஞானிதான் கண்டுபிடித்தார். 1938ம் ஆண்டு ஸ்லீடன் என்ற விஞ்ஞானி தனது தாவரவியல் ஆய்வின் மூலம் ஸ்வானின் கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தினார்.
ஆரம்ப காலகட்டங்களில் இந்த செல் பற்றிய ஆய்வு, செல் சுவர் அளவிலேதான் இருந்து வந்தது. செல் சுவரைத் தாண்டி ஆய்வு செய்வதற்குப் போதுமான உபகரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மின்னணு நுண்நோக்கி (Electron Microscope) கண்டு பிடிக்கப்பட்டப் பின்பு அதன் துணையால் 1831ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரவ்ன் என்ற விஞ்ஞானி செல்லின் மையப்பகுதியல் உருண்டை வடிவிலான ஒரு பொருள் இருப்பதைக் கண்டுபிடித்து, அதற்கு நியூக்ளியஸ் (Nucleus) எனவும் பெயரிட்டார். அதனைத் தொடர்ந்து, உயிரினச் செல் சுவரை அடுத்து ஒரு வகையான கெட்டிப் பொருள் இருப்பது 1846ம் ஆண்டு வான்மோல் என்ற விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டுபிடித்த ஆரம்பக் காலகட்டங்களில், அது பல பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டது.
பின்னாளில் அதற்கு புரோட்டோபிளாசம் என்ற பெயர் நிலை பெற்றது. மேலும் பல ஆய்வுகளை உயிரியல் விஞ்ஞானிகள் மேற் கொண்ட போது, திரவப் பொருள் இருப்தையும் அறிய முடிந்தது. அதற்கு சைட்டோப்பிளாசம் எனவும் பெயர் சூட்டப்பட்டது. 1890ம் ஆண்டுவாக்கில் இந்த சைட்டோப் பிளாசத்திற்குள் நுண்ணிய திடப்பொருள் மிதந்து கொண்டிருப்பதை அல்ட்மான் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். அதனை இன்று மைட்டோ காண்ட்ரிய (Mitochondtia) என்று நாம் அறிந்து வருகிறோம். அதே ஆண்டில்தான் வால்டேயேர் எனும் விஞ்ஞானி உட்கருவினுள் (Nucleus) குரோமோசம்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
விஞ்ஞானிகளின் ஆய்வுப் பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருந்ததன் பயனால், 1953ம் ஆண்டு வாட்சன், க்ரிக் என்ற இரு உயிரியல் விஞ்ஞானிகளும் சேர்ந்து, குரோமோசம்களுக்குள் மரபணுக் கூறான டி.என்.ஏ. (D.N.A) இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்த கண்டு பிடிப்பு உயிரியல் ஆய்வில் மிகப் பெரிய மறுமலர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்தது. மேலும் அது திகிலூட்டும் திருப்புமுனையாகவும் அமைந்திருந்தது. மனிதப் பரம்பரைச் செய்திகள் அனைத்தும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் பல் வேறு தகவல்கள் அதில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் அறியமுடிந்தது. மேலும் ஆய்வினை மேற் கொண்ட போது முடிவில்லாத சங்கிலித் தொடராக அதன் செய்தி தொடர் அமைந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது.
மரபணுக்கூறான டி.என்.ஏ. (D.N.A) வில் பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்திகளில் 3 விழுக்காடு தகவல்கள்தான் இது வரை அறியப்பட்டுள்ளன. அந்த தகவல்கள் மட்டும் பல இலட்சம் பக்கங்களை நிரப்பும் அளவிற்கு இருக்கின்றன என்றால், அறியப்படாத 97 விழுக்காடு தகவல்கள் எத்தனை கோடிப் பக்கங்களை நிரப்பக் கூடியதாக இருக்கும் என்பது மேதைகளுக்கே தலை சுற்றாக விளங்குகிறது. எனவேதான், 1958ம் ஆண்டு கோட்டர்ட் என்பர் செல்லடக்கச் செய்திகள் அனைத்தையும் நாம் சரியான முறையில் புரிந்து கொண்டால், உயிரினத்தின் உண்மை வடிவத்தைப் புரிந்து கொள்வோம் என்று அறிவிப்புச் செய்தார். அதன் பொருள்: இது வரையும் செல் பற்றிய செய்திகளையும், அதில் சார்ந்திருக்கும் மரபணுக் கூறான டி.என்.ஏ. பற்றியும் சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை என்பதை அவர் பறை சாற்றுகிறார். செல் ஆய்வின் பின்னணியை புரிந்து கொண்ட நாம், 1665ம் ஆண்டுக்கு அதாவது 338 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் செல் பற்றியும், அதில் அடங்கியுள்ள குரோமோசம்கள் பற்றியும் துளி கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது மட்டுமல்ல, இதன் பெயர்களைக் கூட அவர்கள் கேட்டிருக்க மாட்டார்கள் எனும் போது 1423 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதர் இந்த செய்திகளை யெல்லாம் அறிந்திருந்தார் என்று சொன்னால் அதனை ஏற்க முடியுமா? நிச்சயமாக யாரும் இதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
கருச்சிசுவின் பாலினத்தை தீர்மானிப்பது விந்தணுதான் என்ற இந்த அறிவியல் உண்மையும் 1953 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது டி.என்.ஏ. (
D.N.A) என்ற துணுக்கினை கண்டறிந்தப் பிறகுதான் இது சாத்தியமாயிற்று. அதற்கு முன்பு வரை இந்த செய்தியினையும் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனாலும் 1423 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவரான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலம் போதிக்கப்பட்ட இறைவேதமான குர்ஆனில் இந்தச் செய்தி தெளிவாகவே சொல்லப் பட்டிருக்கிறது. இந்தச் செய்தியை அவரால் சாதாரண மனிதர் என்ற அடிப்படையில் சொல்லியிருக்க முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது. இந்த டி.என்.ஏ. வையும், அது சார்ந்திருக்கும் குரோமோசோம்களையும் யார் படைத்தானோ, அவனால் மட்டுமே எல்லாக் காலத்திலும் சொல்ல முடியும்.

ஒட்டக வரலாற்றில் முதன் முறையாக….


one
உயிரிகளைப் பிரதியெடுக்கும் குளோனிங் முறைக்கு உலகெங்கும் எதிர்ப்புகள் எழுந்தாலும் இன்றும் உலகின் பல பாகங்களிலும் அதன் முயற்சிகளும், தொடர்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.
டோலி எனும் ஆட்டுக்குட்டி குளோனிங் முளையைத் துவக்கி வைத்தது. இப்போது உலகிலேயே முதன் முதலாக ஒட்டகம் ஒன்று குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்ஜாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஒட்டகம் துபாயிலுள்ள ஒட்டக விருத்தி நிலையத்தில் உலகை வியப்புடன் பார்க்கிறது.
கோடிக்கணக்கான ஒட்டகங்கள் வாழ்ந்த இந்த பூமியில் இந்த ஒட்டகம் ஒரு புதிக சகாப்தத்தின் முதல் சுவடாய் வந்திருக்கும் உண்மையை அறியாமலேயே தாயுடன் விளையாடுவதை விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர்.
ஒரு பெண் ஒட்டகத்தின் செல்லில் இருந்து பிறவி எடுத்துள்ள இந்த ஒட்டகத்துக்குப் பிறந்த நாள் ஏப்பிரல் 8.

வெள்ளி, 15 அக்டோபர், 2010

தாவர உணவை மட்டும் உண்ணும் சிலந்தி


Oxyopid sal.jpg

தாவர உணவை மட்டும் உண்ணும் சிலந்தி   வகை ஒன்று பற்றிய தகவல்களை அறிவியலாளர்கள் தற்போது அறிவித்துள்ளனர்.
   பகீரா கிப்லிங்கி (Bagheera kiplingi) எனப்படும் இவ்வகை சிலந்திகள் நடு அமெரிக்காவிலும், மெக்சிக்கோவிலும் வாழ்ந்து வருகின்றன. இவையே சிலந்தி வகைகளில் தாவர உணவை மட்டும் உண்பவை. இவற்றைவிட ஏனைய இதுவரையில் அறியப்பட்ட கிட்டத்தட்ட 40,000 சிலந்தி வகைகள அனைத்தும் ஊனுண்ணி வகைகளாகும்
இது குறித்த ஆய்வுக் கட்டுரை "நடப்பு உயிரியல்" என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில், பென்சில்வேனியாவின் விலனோவா 
பல்கலைகழத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் கறி என்பவரின் தலைமையில் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
பாயும் சிலந்திதேள்  வகுப்பைச் சேர்ந்த இவை 5-6மிமீ நீளமானவை. புரதங்கள்  நிறைந்த அக்காசியா வகைத் தாவரங்களின் குருத்துக்களையே இவை பெரும்பாலும் உண்கின்றன. ஆனாலும் இம்மரத்தின் இலைகளை அடைவதற்கு இச்சிலந்தி அம்மரங்களின் துளைகளில் வாழும் எறும்பு களை விலக்கியே வர வேண்டியிருக்கிறது.
Cquote1.png தாவரங்களை மட்டுமே தேடிச் செல்லும் சிலந்தி உலகில் இதுவொன்றே. Cquote2.png
—பேராசிரியர் ராபர்ட் கறி
இவ்வகை சிலந்திகளின் ஊனுண்ணாமை முதற் தடவையாக கொஸ்டா ரிக்காவில் 2001 ஆம் ஆண்டில் எரிக் ஒல்சென் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் 2007 ஆம் ஆண்டில் கிறிஸ்டோபர் மீகன் என்பவரால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தற்போது பேராசிரியர் கறியின் தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கறி இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், "தாவரங்களை மட்டுமே தேடிச் செல்லும் சிலந்தி உலகில் இதுவொன்றே" எனத் தெரிவித்தார்.
"இவை பாயும் சிலந்திகளாதலால், தமது உணவுக்காக வலைகளைப் பின்ன வேண்டியதில்லை. அவ்வப்போது எறும்புகளால் அக்கேசியா தாவரங்கள் சூழப்படும் போது மாத்திரம் கீழ் இறங்கிய பின்னர் எறும்புகள் திரும்பிவிட அவையும் மீண்டும் ஏறிவிடுகின்றன. அத்துடன் அவற்றிற்கு போசரணக்குறைபாடு ஏற்படும் இடத்து எறும்புகளில் குடம்பிகளை உடைத்து அதன் சாற்றையும் குடிக்கின்றன."

"அக்காசியாக்கள் ஆண்டு முழுவதும் இலைகளைத் தருவதால் இச்சிலந்திகளுக்கு உணவுக்குப் பஞ்சமில்லை," இவ்வாறு தெரிவித்தார் பேராசிரியர் ராபர்ட் கறி.

  


நீர்நாரைகள் ஏன் ஒற்றைக்காலில் நிற்க விரும்புகின்றன?


நீர் நாரை (Flamingo) என்பது நீண்ட கால்களையும் நீண்ட கழுத்தையும் கொண்ட பறவை. இப்பறவைகள் ஏன் ஒரு காலிலேயே நீண்ட நேரம் நிற்க விருப்பமுள்ளவை?
விலங்குக்காட்சிச் சாலைகளுக்கு செல்லும் பலரும் கேட்கும் கேள்வி இது. ஆனாலும் இதற்கு எவரும் விளக்கமான பதில் தரவில்லை.
இப்போது கரிபியன் நீர்நாரைகளை நீண்டகாலம் ஆய்வு நடத்திய அறிவியலாளர்கள் இதற்கு ஒரு விடை கண்டுபிடித்துள்ளார்கள்.
நீர்நாரைகள் தமது உடல் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கே ஒரு காலில் நிற்கின்றன என அவைர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
 பில  டெல் பியாவின்  புனித யோசப் பல்கலைக்கழகத்தின் உளவியல் வல்லுநர்கள் மத்தியூ அண்டர்சன், சேரா வில்லியம்ஸ் ஆகியோர் (பரிணாம) படி வளர்ச்சியின் நடத்தைகளை ஆய்வு செய்பவர்கள்.
இவர்கள் நீர்நாரைகளின் நடத்தைகளை ஆராய்ந்தார்கள். குறிப்பாக, மனிதர்கள் இடக்கை, வலக்கை பழக்கங்கள் கொண்டிருப்பது போல, நீர்நாரைகள் தமது உடலின் எப்பகுதியை தமது பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றன என்பது குறித்து ஆராய்ந்தார்கள்.


ஒரு காலில் நிற்கும் அமெரிக்க நீர்நாரைகள், டொமினிக்கன் குடியரசு
நீர்நாரைகள் தமது தலைப்பகுதியை ஒரே பக்கத்தில் அதிக நேரம் ஓய்வாக வைத்திருப்பதை அவதானித்தார்கள். அத்துடன், தலைப்பகுதியின் எப்பக்கத்தை அதிக நேரம் ஓய்வாக வைத்திருப்பதை வைத்து அவை தமது கூட்டத்தில் ஏனைய பறவைகளுடன் எவ்வாறு முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றன என்பதையும் அது தீர்மானிக்கிறது.
வலப்பக்கத்தில் தலைப்பகுதியை அதிகநேரம் ஓய்வாக வைத்திருக்க விரும்பும் நீர்நாரைகள் அதிக முரட்டுத்தனத்துடன் தென்படுவதாக மத்தியூ அண்டர்சன் தெரிவித்தார்.
இதனை அடிப்படையாக வைத்து நீர்நாரைகள் ஒரு காலில் நிற்கும் பழக்கத்தையும் ஆராய்ந்தார்கள். இதற்காக அவர்கள் கரிபியன் நீர்நாரைகளை (Phoenicopterus ruber) பிலடெல்பியா விலங்குக்காட்சிச் சாலையில் பல மாதங்களாக அவதானித்தார்கள்.

லிசுபன் விலங்குக்காட்சி சாலையில் நீர்நாரை
எந்தக்காலில் அவை நிற்க விரும்புகின்றன என்பது பெரிதாகத் தெரியவில்லை. ஆனாலும் அவை குளிர் நீரில் நிற்கும் போது நீண்ட நேரம் ஒரு காலில் நிற்பதையே விரும்புகின்றன.
ஒருகாலில் நிற்பதன் மூலம் அவை பெருமளவில் ஆற்றலை  உள்வாங்கிச் சேமிப்பதன் மூலம், அவை நீண்ட நேரம் குளிர்ந்த நீரில் நடக்க முடிகிறது என அண்டர்சன் தெரிவித்தார்.
இரண்டு கால்களையும் நீரில் வைப்பதன் மூலம் அவை அதிகளவு வெப்பத்தை இழக்க வேண்டி வரலாம்.
ஆனாலும் இவை தவிர ஒரு காலில் நிற்பதன் மூலம் வேறு பயன்களையும் நீர்நாரைகள் பெறலாம் என்ற கருத்தையும் அவர்கள் மறுக்கவில்லை.

கரப்பான் பூச்சியின் மூளையில்

நுண்ணுயிர் எதிர்ப்பு ஆற்றல்



கரப்பான் பூச்சியும் வெட்டுக்கிளியும்  மனிதரின் உயிர் காக்கும் மருத்துவர்களாக மாறும் நாள் தொலையில் இல்லை என இங்கலாந்தில்  உள்ள நாட்டிங்கம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சைமன் லீ என்பவரின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பூச்சிகளின் மூளையில் காணப்படுகின்ற வேதிக் கூறுகள் பல தீங்குதரும் நுண்ணுயிரிகளைக் கொல்லும் தன்மை கொண்டுள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




கரப்பான் பூச்சி
பொது நுண்ணுயிரியலுக்கான குமுகாயத்தின் கூட்டம் ஒன்றிலேயே இந்த ஆய்வு குறித்து அறிவிக்கப்பட்டது.

கரப்பான் பூச்சி (வட்டார வழக்கில் பாச்சா, பாச்சை) அழுக்கு நிறைந்த சூழலிலும் உயிர் வாழும் தன்மையது. அங்கே தொற்றுநோய்களைப் பரப்பும் நுண்ணுயிரிகள் நிறைந்திருக்கும். இருப்பினும் அந்நுண்ணுயிரிகளை எதிர்க்கும் சக்தி கரப்பான் பூச்சியின் மூளைப்பகுதியில் காணப்படும் வேதிக் கூறுகளுக்கு உள்ளது. கரப்பான் பூச்சியின் நரம்பு மண்டலம் நுண்ணுயிரிகளின் தாக்குதலிலிருந்து காக்கப்படுவது வியப்பைத் தருகிறது என்று அறிவியலார் கருதுகின்றனர். நரம்பு மண்டலம் நுண்ணுயிரிகளால் தாக்கப்பட்டால் சாவு உறுதி. ஆனால் கரப்பான் பூச்சியிடம் நுண்ணுயிரி எதிர்ப்புத் திறன் மிகுதியாகவே உள்ளது.


சாதாரணமாக, கூட்டுகின்றன. தொடர்ந்து அம்மாத்திரைகளின் செயல்திறனைச் சில நுண்ணுயிர் எதிர்ப்பு மாத்திரைகள் நோய் எதிர்ப்புத்திறனை ஓரளவுக்குத்தான் கூட்டுகின்றன. தொடர்ந்து அம்மாத்திரைகளின் செயல்திறனைச் சில நுண்ணுயிரிகள் எளிதில் சமாளிக்கவும் பழகிக்கொள்கின்றன. எனவே, மாத்திரைகளின் திறனைக் கூட்டிக்கொண்டே போகவேண்டிய கட்டாயம் எழுகிறது.


கரப்பான் பூச்சியின் மூளைப் பகுதியிலிருந்து பெறப்படும் சிற்றளவிலான வேதிக் கூறுகள் நுண்ணுயிரிகளைக் கொல்வதில் 90% திறம் கொண்டவையாக உளவாம்.


இக்கண்டுபிடிப்பின் விளைவாக மருத்துவத் துறை பயன்பெறும் என்றாலும் அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என்று ஆய்வாளர் கூறுகின்றனர். முதலில் இன்னும் விரிவான ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். பின் மருந்துவகைகள் ஆக்கப்பட வேண்டும். அதன் பிறகுதான் மருந்து சந்தைக்கு வரும். ஆனால் மதிப்பற்ற கரப்பான் பூச்சியும் விரைவில் மனிதரின் உயிர்காக்கும் நண்பனாக மாறலாம் என்பது வியப்புதான்!

பறக்கும் அதிசய மீன்!


படத்தில் நீங்கள் பார்ப்பது பறவை அல்ல. இது ஒரு வகை மீன். இந்த மீன், கடலில் தண்ணீரின் மேற்பரப்பில் இருந்து வெளியே பாய்ந்து, ஒன்பது அடி உயரம் வரை செல்லும். பின் சில அடி தூரம் சுற்றி விட்டு, மீண்டும் கடலில் தொப் என விழுந்து விடும். பறவை மீன் என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த மீனின் பெயர், "மந்தா ரேய்ஸ்!' மத்திய அமெரிக்காவில் கோஸ்டாரிகா கடல் பகுதியில் இந்த வகை மீன்கள் அதிகம் காணப்படுகின்றன. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த போட்டோகிராபர் தம்பதியரான ரோலன்ட் மற்றும் ஜூலியா ஆகிய இருவரும் நடுக்கடலில் படகில் சென்று, இந்த மீனை புகைப்படம் எடுத்தனர். "இந்த மீன் தண்ணீருக்கு வெளியே வரும் போது, தன் செதில்களை, இறக்கைகள் போல் விரித்து, படபடவென அடித்து பறக்கிறது. கடலில் சுறா மீன்களை படம் எடுக்கச் சென்ற எங்களுக்கு இந்த மீன் மிக அபூர்வ காட்சியாக அமைந்தது...' என்கின்றனர் இந்த இருவரும். இந்த வகை மீன்கள் 25 அடி நீளம் வரை வளரும். அதிக பட்சம் 2,000 கிலோ வரை இருக்கும். இந்த சைசில் உள்ள மீன்கள் பறப்பது மிகவும் அபூர்வ காட்சிதான்.

குளோனிங் பசுக்களின் பால்


குளோனிங் முறையில் உயிர்களை உருவாக்க ஒரு புறம் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதே நேரத்தில், குளோனிங் முறையில் படைக்கப்படும் உயிரினங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தும் வருகிறது. குளோனிங் மூலம் படைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்களின் பால், பிரிட்டனில் விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் ரகசியமாக சேகரிக்கப்பட்ட தகவல்கள் மூலம் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நம்ம ஊரில் வீடுகளில் மாடுகளை வளர்ப்பது போல், பிரிட்டனில் மாடுகளை வளர்க்க முடியாது. ஊருக்கு வெளியே, பெரிய பண்ணைகளில் தான் மாடுகளை வளர்க்க முடியும். தொழிற்சாலைகள் போல் காட்சி தரும் மாட்டுப் பண்ணைகளில் பல வித மாடுகள் வளர்க்கப்படும். அங்கிருந்தே பால், மாமிசம் போன்றவை நகருக்குள் அனுப்பப்படும். கடந்த 2006ம் ஆண்டு, பிரிட்டனில் முதல் குளோனிங் பசு மாடு உருவாக்கப்பட்டது. "துண்டி பேரடைஸ்' என அழைக்கப்பட்ட அந்த பசு ஷூரோப்ஷையர் என்ற ஊரில் உள்ள பண்ணையில் பிறந்தது.
பிரிட்டனில் பல பண்ணைகளில் குளோனிங் பசு மாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பசு மாடுகளிடம் இருந்து பெறப்படும் பால், நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. "இது குளோனிங் பசுவிடம் இருந்து பெறப்பட்ட பால்...' என எந்த முத்திரையும் இன்றி, அந்த பால் விற்பனை செய்யப்படுகிறது. குளோனிங் பசுக்களின் பால், இறைச்சிகளை விற்பனை செய்ய தனி சட்டம் எதுவும் பிரிட்டனில் இல்லை. எனவே, உடனடியாக அதற்கான தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என, மிருக வதை தடுப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். "குளோனிங் அல்லது குளோனிங் வாரிசு பசுக்களின் மூலம் கிடைக்கும் உணவு பொருட்கள், மனித உடல் நலனுக்கு ஏற்றதா என இன்னும் ஆய்வு செய்யப்பட வில்லை. குளோனிங் மூலம் உருவாக்கப்படும் மிருகங்களுக்கு உறுப்பு குறைபாடுகள், ஆரோக்கியமில்லாத உடல், வலி ஆகியவை உள்ளன. எனவே, குளோனிங் மிருகங்களுக்கு தடை விதிக்க வேண்டும்...' என, மிருக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு குளோனிங் மிருகங்களுக்கு எதிர்ப்பு இருந்தாலும், பிரிட்டன் விவசாயிகள் அது பற்றி கவலைப்பட வில்லை. "குளோனிங் பசுக்கள் மிகவும் பெரிதாக உள்ளன. அதன் மூலம் அதிக அளவு பால் கிடைக்கிறது. இது விவசாயிகளுக்கு நல்லதுதானே. அதை ஏன் எதிர்க்க வேண்டும்?' என்கின்றனர் அவர்கள். "குளோனிங் மிருகங்கள் மூலம் உணவின் தரம் அதிகரிக்கும்!' என, விவசாயிகளுக்கு ஆதரவாக விஞ்ஞானிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வியாழன், 14 அக்டோபர், 2010


இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள்

 

 

இதய நலம் பற்றிப் பேசும்போது, உடல் ஆரோக்கியத்தோடு மிக மிக நெருக்கமான தொடர்புடைய உணவுப் பழக்கம் பற்றியும் நாம் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
நமது உடல் நலமும், மனநலமும் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன. நாம் சாப்பிடும் உணவின் தன்மை மற்றும் அளவை அடிப்படையாகக் கொண்டுதான் நம்முடைய வாழ்க்கை அமைந்துள்ளது. எனவேதான் ஆங்கிலத்தில் You are what you eat என்று சொல்வார்கள். அதாவது நீ சாப்பிடும் உணவின் தன்மைத்தான் நீ யார் என்று தீர்மானிக்கிறது என்று பொருள்.
நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களைச் சர்க்கரைப் பொருள்கள் புரதம், கொழுப்புச்சத்து, உயிர்ச்சத்து, தாது உப்புகள் என பலவகைகளாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் இனி விளக்கமாகப் பார்க்கலாம்.
கொழுப்புச் சத்து
கொழுப்புச் சத்து என்பது நீரில் கரையும் இயல்புடையது. அதே சமயம் ஆல்கஹால், ஈதல் போன்றவற்றிலும் கரையக் கூடியது.
கொழுப்புச் சத்துகள்தான் நமது உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கின்றன. எனவேதான் கொழுப்புச் சத்தை ஆற்றலின் பெட்டகம் (Store house of energy)  என்று சொல்கிறார்கள். ஒரு கிராம் கொழுப்புச் சத்தானது 9 கலோரிகள் வெப்ப ஆற்றலைத் தருகிறது.
நமது ஒரு நாளைக்கான கொழுப்புச் சத்து தேவையானது நம் வயது, உடல் அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. தினசரி ஒரு தனி மனிதனுக்கான மொத்தக் கலோரிகள் தேவையில் 10 முதல் 15 சதவீதம், கொழுப்புச் சத்துகளில் இருந்து கிடைக்க வேண்டும். தனி மனிதனின் அன்றாட உணவில் கொலஸ்ட்ராலின் அளவு 150 மில்லி கிராமுக்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும்.
அளவுக்கு அதிகமாகக் கொழுப்புப் பொருள்களை நம் அன்றாட உணவில் சேர்ப்பதால் நமது இதயம் பாதிக்கப்படுவது பற்றியும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாவது பற்றியும் ஏற்கெனவே பார்த்தோம். ரத்தக்குழாய்களில் கொழுப்புப் படிவங்கள் சேர்வதன் மூலமாக மூளைக்குப் போகும் ரத்தத்தின் அளவு குறைந்து ஸ்ட்ரோக் (Stroke) போன்ற ஆபத்தான பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.
கொழுப்பு வகை உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது மூன்று அம்சங்களைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். இந்த வகையான கொழுப்பு முதலில் தேவைதானா என்பதை யோசிக்க வேண்டும். நாம் சாப்பிடப்போகும் கொழுப்பின் தன்மையைப் பார்க்க வேண்டும். இறுதியாகக நாம் சாப்பிடப் போகும் கொழுப்பின் அளவை கவனிக்க வேண்டும்.
தினசரி உணவில் கொழுப்பு வகை உணவுகளைச் சேர்க்கும்போது, செறிவற்ற கொழுப்பையும், செறிவுற்ற கொழுப்பையும் 2: 1 பங்கு என்ற விகிதத்தில் பயன்படுத்துவது நல்லது.
அன்றாட உணவில் செறிவுற்ற கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகளான ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, தேங்காய் எண்ணெய், வெண்ணெய், நெய், வனஸ்பதி, பாமாயில், முட்டை மஞ்சள் கரு, பால், பால் சார்ந்த பொருள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது உங்கள் இதய நலனைப் பாதிக்காத வகையில் மிகவும் குறைவான அளவில் சேர்த்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது.

வனஸ்பதி
தாவர எண்ணெய்களில் ஹைட்ரஜன் அணுக்களைச் செயற்கையாகச் செலுத்தி, அவற்றைச் செயற்கையாக உறையவைத்து உருவாக்கப்படும் கெட்டியான எண்ணெய் வகைதான் வனஸ்பதி. இவ்வாறு தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் Trans fat எனப்படும். நம் நாட்டில் இதன் விலை குறைவாக இருப்பதால் சமையலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் வனஸ்பதியை அதிகம் சேர்த்துக் கொள்வது நம் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
அண்மையில், வனஸ்பதிக்கும், இதய நோய்க்குமான தொடர்பு பற்றி ஆய்வு செய்த உணவியல் வல்லுநர்களும், இதய மருத்துவர்களும், செறிவுற்ற கொழுப்பைவிட மிக அதிக அளவில் இதயத் தமனிகளைச் சிதைக்கும் ஆற்றல் வனஸ்பதிக்கு உண்டு என்று கண்டுபிடித்துள்ளனர்.
எனவே உலகெங்கும் வனஸ்பதியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்க ஒரு இயக்கத்தையே தொடங்கியுள்ளார்கள். இதய நலத்தைக் காக்க விரும்புபவர்களும், ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்களும், அன்றாட உணவில் டிரான்ஸ் கொழுப்பு வகையில் வருகிற வனஸ்பதியைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது இதயத்தக்கு நல்லது.

 

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

அசைவத் தாவரங்கள்!!!!

 அதிசியத்தாவரங்கள்!!!!


சில செடிகளின் மலர்கள், தங்களைத் தேடி வரும் பூச்சிகளையும், வண்டுகளையும் உணவாக உட்கொள்கின்றன. அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் இது போன்ற தாவரங்களைக் காணலாம்.
ஜாடி போன்ற பூக்களைக் கொண்ட `பீட்சர்’ என்ற தாவரமும், `சன் ட்’ மலரும், `வீனஸ் பிளை டிராப்’ மலரும் பூச்சிகளைக் கொன்று ருசிப்பதில் வல்லவை. சில தாவரங்கள் முழுநேரமும் பூச்சிகளையும், புழுக்களையும் உணவாக உட்கொள்வதையே வழக்கமாக வைத்திருக்கின்றன. உலகின் பல பகுதிகளிலும இந்தத் தாவரங்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கு `டிராசீரா’, `டயானியா’ என்று விஞ்ஞானிகள் அறிவியல் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
இந்த அசைவத் தாவரங்கள் தங்களின் இலைகளில் மிகச் சிறிய ரோமம் போன்ற அமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. மெல்லிய ரோமங்களில் பசை போன்ற பொருள் காணப்படுகிறது. எனவே இவற்றின் மீது அமரும் புழு, பூச்சிகள் ஒட்டிக்கொள்கின்றன. பின்னர் அவற்றைத் தனது இலைகளால் மூடிச் சுருட்டிக் கொல்கிறது. அந்த உயிரினங்களை அமிலம் போன்ற சுரப்புகளால் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துக் கிரகித்து விடுகிறது.
பின் மறுபடி இலையை விரித்து அடுத்த பூச்சியின் வரவுக்காகக் காத்திருக்
கிறது. இந்தத் தாவரம் மண்ணில் இருந்து நீரையோ, சத்துகளையோ எடுத்துக்கொள்வதில்லை. இத்தாவரங்களுக்குத் தேவையான சத்து முழுவதும் உயிரினங்களில் இருந்தே கிடைக்கிறது.
இதைப் போன்ற விசித்திரமான தாவரங்கள் இந்தியாவில் அரிது. அபூர்வமாக நம் நாட்டின் வறண்ட காடுகளிலும், சில சதுப்புநிலப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இப்படி பூச்சிகளைக் கொன்று சாப்பிடும் தாவரங்கள் பெரிதாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் தவறு. இவை சிறிதாகவே இருக்கின்றன. 3 முதல் 5 அங்குலமே இருக்கும்.

 

சனி, 18 செப்டம்பர், 2010

 மெல்லோட்டம்

 தரும்

 உற்சாகம்

-Jogging

ஓய்வு, உறக்கம், உடற்பயிற்சி இவை மூன்றும் மனிதனுக்கு அவசியத் தேவையாகும். ஆனால் அவை அளவோடு இருக்க வேண்டும்.
உடற்பயிற்சி மனிதனை என்றும் புத்துணர்வுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கச் செய்யும் மருந்தாகும். இன்றைய கால கட்டத்தில் இளம் வயதில் உடற்பயிற்சியின்றி இருந்தவர்கள், 40 வயதை கடந்தாலே நோயின் பிடிக்கு ஆளாகின்றனர். நோயில்லா பெருவாழ்வு பெற உடற்பயிற்சி அவசியமாகும்.
தேங்கிய குட்டை நீர் சாக்கடையாக மாறிவிடும். ஓடாத இயந்திரம் பழுதாகிவிடும். உபயோகமில்லா இரும்பு ஆயுதங்களில் துரு ஏறிவிடும். உழைக்காத, உடற்பயிற்சி செய்யாத உடலும் உருக் குலைந்துவிடும்.
பொதுவாக சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல், நடைப்பயிற்சி, மெல்லோட்டம் போன்றவை உலகெங்கிலும் உள்ள மக்களால் ஆண், பெண் பாகுபாடின்றி மேற்கொள்ளப்படுகிறது.
உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்
· உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.
· நம் உடலின் உறுப்புகளும், நரம்புகளும் புத்துணர்வடையும்.
· தசைகள் நன்கு சுருங்கி விரிவடைவதால் உடல் பலமடையும்.
· உண்ட உணவு எளிதில் சீரணமடையும். அதன் சத்துக்கள் முழுவதும் உடலில் சீராக பரவும்.
· இதயம் பலப்படும்.
உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி தேவை இல்லை. ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடற்பயிற்சி அவசியம் தேவை.
நல்ல காற்றோட்டம் நிறைந்த பகுதியில் அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்யும் முன் மலம், சிறுநீர் இரண்டையும் வெளியேற்றி விடவேண்டும்.
மெல்லோட்டம்
மெல்லோட்டத்தை ஆங்கிலத்தில் ஜாகிங் (Jogging) என்பார்கள். விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான ஓட்டமாகும்.
இந்த மெல்லோட்டத்தை ஆண் பெண் இருபாலரும் மேற்கொள்ளலாம். மெல்லோட்டம் செய்ய காலை நேரமே சிறந்தது.
பருத்தியினாலான இறுக்கமில்லாத ஆடைகளை அணிந்துகெள்ள வேண்டும். ஆரம்பத்தில் 1/2 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது. அதுபோல் 50 வயதைக் கடந்தவர்கள் 5 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது. இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்று ஓடலாம். தினமும் செய்யாமல் ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.
மெல்லோட்டத்தால் ஏற்படும் நன்மைகள்
· மன அழுத்தம், மன எரிச்சல் நீங்குகிறது.
· நுரையீரலுக்கு போதுமான ஆக்ஸிஜனைப் பெற்று இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
· இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது.
· உடலின் எடை சீராக வைக்கப்படுகிறது.
· இதயத் தசைகள் வலுவாக்குகிறது.
· இதயம் சுருங்கி விரியும்போது இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது.
· இரவில் நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது.
· உடலின் தசைகள் வலுப்பெறுகிறது.
· எலும்புகளில் உள்ள சுண்ணாம்புச்சத்து குறைவைத் தடுத்து எலும்புகளை பலப்படுத்துகிறது.
· நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
· என்றும் இளமைப் பொலிவோடு இருக்க உதவி செய்கிறது.
· முதுமையைத் தள்ளிப்போட வைக்கிறது.
மெல்லோட்டம் சிறந்த உடற்பயிற்சியாகும். இதனை கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்.