சனி, 18 செப்டம்பர், 2010

 மெல்லோட்டம்

 தரும்

 உற்சாகம்

-Jogging

ஓய்வு, உறக்கம், உடற்பயிற்சி இவை மூன்றும் மனிதனுக்கு அவசியத் தேவையாகும். ஆனால் அவை அளவோடு இருக்க வேண்டும்.
உடற்பயிற்சி மனிதனை என்றும் புத்துணர்வுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கச் செய்யும் மருந்தாகும். இன்றைய கால கட்டத்தில் இளம் வயதில் உடற்பயிற்சியின்றி இருந்தவர்கள், 40 வயதை கடந்தாலே நோயின் பிடிக்கு ஆளாகின்றனர். நோயில்லா பெருவாழ்வு பெற உடற்பயிற்சி அவசியமாகும்.
தேங்கிய குட்டை நீர் சாக்கடையாக மாறிவிடும். ஓடாத இயந்திரம் பழுதாகிவிடும். உபயோகமில்லா இரும்பு ஆயுதங்களில் துரு ஏறிவிடும். உழைக்காத, உடற்பயிற்சி செய்யாத உடலும் உருக் குலைந்துவிடும்.
பொதுவாக சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல், நடைப்பயிற்சி, மெல்லோட்டம் போன்றவை உலகெங்கிலும் உள்ள மக்களால் ஆண், பெண் பாகுபாடின்றி மேற்கொள்ளப்படுகிறது.
உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்
· உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.
· நம் உடலின் உறுப்புகளும், நரம்புகளும் புத்துணர்வடையும்.
· தசைகள் நன்கு சுருங்கி விரிவடைவதால் உடல் பலமடையும்.
· உண்ட உணவு எளிதில் சீரணமடையும். அதன் சத்துக்கள் முழுவதும் உடலில் சீராக பரவும்.
· இதயம் பலப்படும்.
உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி தேவை இல்லை. ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடற்பயிற்சி அவசியம் தேவை.
நல்ல காற்றோட்டம் நிறைந்த பகுதியில் அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்யும் முன் மலம், சிறுநீர் இரண்டையும் வெளியேற்றி விடவேண்டும்.
மெல்லோட்டம்
மெல்லோட்டத்தை ஆங்கிலத்தில் ஜாகிங் (Jogging) என்பார்கள். விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான ஓட்டமாகும்.
இந்த மெல்லோட்டத்தை ஆண் பெண் இருபாலரும் மேற்கொள்ளலாம். மெல்லோட்டம் செய்ய காலை நேரமே சிறந்தது.
பருத்தியினாலான இறுக்கமில்லாத ஆடைகளை அணிந்துகெள்ள வேண்டும். ஆரம்பத்தில் 1/2 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது. அதுபோல் 50 வயதைக் கடந்தவர்கள் 5 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது. இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்று ஓடலாம். தினமும் செய்யாமல் ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.
மெல்லோட்டத்தால் ஏற்படும் நன்மைகள்
· மன அழுத்தம், மன எரிச்சல் நீங்குகிறது.
· நுரையீரலுக்கு போதுமான ஆக்ஸிஜனைப் பெற்று இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
· இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது.
· உடலின் எடை சீராக வைக்கப்படுகிறது.
· இதயத் தசைகள் வலுவாக்குகிறது.
· இதயம் சுருங்கி விரியும்போது இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது.
· இரவில் நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது.
· உடலின் தசைகள் வலுப்பெறுகிறது.
· எலும்புகளில் உள்ள சுண்ணாம்புச்சத்து குறைவைத் தடுத்து எலும்புகளை பலப்படுத்துகிறது.
· நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
· என்றும் இளமைப் பொலிவோடு இருக்க உதவி செய்கிறது.
· முதுமையைத் தள்ளிப்போட வைக்கிறது.
மெல்லோட்டம் சிறந்த உடற்பயிற்சியாகும். இதனை கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

கவியரசு கண்ணதாசன் வாழ்க்கை குறிப்பு 



பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி
பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
மரபு - தன வணிகர்
இயற்பெயர் - முத்தையா
உடன்பிறந்தோர் - எண்மர்
கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை
1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ கம்பெனி
1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர்
1944 - முதற் கவிதை - முதற் கவிதை
1945/46 திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
1949 சண்டமாருதம் ஆசிரியர்
1949 திரைப்படத் துறை பயிற்சி
1949 -முதற் பாடல் - படம் கன்னியின் காதலி,
பாடல் கலங்காதேதிருமனமே
1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி
1952-53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
1952-53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,
1956 முல்லை இலக்கிய மாத இதழ்
1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷடியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
1957 - திரைப்படத் தயாரிப்பு - - மாலையிட்ட மங்கை
1958-59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
1960 - 61 - அரசியல் மாற்றம் - - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம்
புதிய கட்சி -தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம்,
தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
1962-63இல் காங்கிரஸில் இணைப்பு
மீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம் 1964 - 66 - அகில இந்திய காங்கிரஸ செயற்குழு உறுப்பினர்
1968-1969 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
1970 - ரஷயப் பயணம், சிறந்த பாடலாசிரியர் விருது -மத்திய, மாநில அரசுகள்
1971, 1975 - மலேஷியா பயணம்
1978 - அரசவைக் கவிஞர்
1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி
1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
1981 - அமெரிக்கா பயணம் (டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழா
இறுதி நாட்கள் - உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார். 20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.
புனைபெயர்கள் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
குடும்பம் - இருமனைவியரும் ஒன்பது ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உள்ளனர்.
அன்பு

அன்புக்கோ இருவர் வேண்டும்
அழுகைக்கோ ஒருவர் போதும்
இன்பத்துக் கிருவர் வேண்டும்
ஏக்கத்துக் கொருவர் போதும்.
கவியரசு கண்ணதாசன்

கவிதை 



உள்ளம் என்பது
ஆமை - அதில்
உண்மை என்பது
ஊமை
சொல்லில் வருவது
பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி 



கவியரசு கண்ணதாசன்

கவிதை  



ஆடை இன்றி 
பிறந்தொமே - ஆசை இன்றி 
பிறந்தொமா?
ஆடி முடிக்கையிலே
அள்ளி சென்ரோர் 
யாருமுண்டொ?
 கவியரசு கண்ணதாசன் 

கவிதை 



இந்த பூமியில் நிலையாய் வழ்ந்தவர் யாரடா?
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் 
 இந்த மண்ணில் நமக்கெ இடமேது?
வாழ்க்கை என்பது வியாபராம் 
வரும் ஜனனம் என்பது வரவாகும் - அதில்
மரணம் என்பது செலவாகும்.
 கவியரசு கண்ணதாசன் 

கவிதை  

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு! 



கண்ணதாசன்  கவிதை


நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா



மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா
மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா
அன்பே மறையத் தெரியாதா



எடுக்கத் தெரிந்த கரமே உனக்கு கொடுக்கத் தெரியாதா
இனிக்கத் தெரிந்த கனியே உனக்கு கசக்கத் தெரியாதா
படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்கத் தெரியாதா
படரத் தெரிந்த பனியே உனக்கு மறையத் தெரியாதா
பனியே மறையத் தெரியாதா



கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா
பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா
இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா


கண்ணதாசன் கவிதை


ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே! (ஆசை)

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை)

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா முதுமையே சுகமா!
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை)

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை)

 கண்ணதாசன் கவிதை



தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
தருமம் மறுபடியும் வெல்லும் என்ற
மருமத்தை நம்மாலே உலகம் கற்பும் இன்று
கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்!

 

 

அறிஞர் கா. ந. அண்ணாதுரை

தத்துவம்


"ஒன்றே குலம், ஒருவனே தேவன்"

"கடவுள் ஒன்று, மனித நேயமும் ஒன்று தான்"

கடமை கண்ணியம் கட்டுபாடு

கண்ணதாசன்
பிறப்பு முத்தையா
சூன் 24 1927
சிறுகூடல்பட்டி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு அக்டோபர் 17 1981 (அகவை 54)
சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா
புனைப்பெயர் காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
தொழில் கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்
நாடு இந்தியர்
இனம் தமிழர்
நாட்டுரிமை இந்தியர்
எழுதிய காலம் 1944-1981
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
சிறந்த வசனத்திற்கான தேசிய விருது
1961 குழந்தைக்காக


சாகித்திய அகதமி விருது
1980 சேரமான் காதலி
துணைவர்(கள்) பொன்னழகி
பார்வதி
பிள்ளைகள் 13























ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

கண்ணதாசனின் அனுபவ மொழிகள்

அளந்து சிரியுங்க..,




வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் வாய் விட்டு மனதாரச் சிரிக்கிறோம்? வெறுமனே ஒரு மென்னகையோடு, எங்கே இதற்குமேல் சிரித்தால் காசு போய்விடுமோ என்பது போலச் சிரிக்கிறோம்.

ஜப்பான் நாட்டு மனோதத்துவப் பேராசிரியர் யோஜி கிமுரோ சிரிப்பை அளப்பதற்கு ஒரு டிஜிடல் கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார். அவர் சொல்கிறார், "வாயாற வயிறு குலுங்கச் சிரித்தால்தான் அது இயல்பான சிரிப்பு.

சிரிக்கும்போது பல முறை 'ஹாஹ் ஹாஹ்' என்ற சத்தம் வெளிப்படுகிறது. தொடர்ச்சியாக இந்த சத்தம் வெளிப்பட வேண்டும். அப்படி வெளிப்பட்டால் மின்னதிர்வுகள் உடலில் பரவி சுரப்பிகள் இயங்கும் திறன் அதிகமாகும். ரத்த ஓட்டம் சீராகும். இதயத்துக்கும் வயிற்றுக்கும் இடையே உள்ள தசைகள் (உதரவிதானம்) முழு வேகத்தில் புத்துணர்ச்சி பெறும்".

குறிப்பிட்ட அளவு 'ஹாஹ் ஹாஹ்'கள் நம்மிடமிருந்து வெளிவரும்போது ஏற்படும் மின்னதிர்வுகளை இவர் கண்டுபிடுத்துள்ள டிஜிடல் கருவி அளவிடுகிறது. நகைச்சுவை உணர்வே இந்த மின்னதிர்வுகளை ஏற்படுத்தி மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கவைக்கும்.

அப்புறம் என்ன? 'ஹாஹ் ஹாஹ்' என்று சிரிக்க வேண்டியதுதானே! (தனியாக மட்டும் சிரிக்காதீர்கள்! வேறுமாதிரியாக நினைத்துக்கொள்ளப் போகிறார்கள்!)

குடிச்சாப் போகுமா துக்கம்?



குடிப்பழக்கம் உள்ளவர்களிடமெல்லாம் காரணம் கேட்டால் கவலையை மறக்கக் குடிப்பதாகக் கூறுவார்கள். ஆனால் உண்மையில் குடிப்பதால் கவலை அதிகரிக்கத்தான் செய்யும் என்கிறது ஓர் ஆய்வு.

இரு பிரிவு எலிகளை இதற்காகத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு லேசான அளவில் மின் அதிர்வு தரப்பட்டது. அதன் பிறகு ஒரு பிரிவு எலிகளுக்கு 'எத்தனால்' (சாராயம்) கொடுத்துக் கண்காணித்தார்கள். இன்னொரு பிரிவிற்கு 'எத்தனால்' செலுத்தவில்லை. 'எத்தனால்' செலுத்தப்பட்ட எலிகளுக்கு மதுவில் இருக்கும் போதைத்தன்மை நரம்பிலேயே தங்கிவிடுகிறது.

பய உணர்வு இருந்தால் அது நீங்க இரு வாரங்கள் ஆகின்றன. அதிர்ச்சி நீங்க அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால் 'எத்தனால்' செலுத்தப்படாத எலிகள் அதிர்ச்சியிலிருந்து விரைவில் மீண்டுவிடுகின்றன.

மனிதர்களிடம் சோதனை செய்தபோது கவலையைப் போக்குவதற்காக மது அருந்துவோர் அந்தக் கவலையில்தான் அதிகம் மூழ்குகின்றனர். தாங்கள் விரும்பாத சம்பவத்தை மறப்பதற்காகக் குடிப்பதாகச் சொல்லப்படும் மது அந்த விஷயத்தை நீண்ட காலம் நினைவில் நிறுத்துகிறது என அறிய வந்தது.

பழமொழிகள் ஆங்கில விளக்கத்துடன்

1. பூ மலர்ந்து கெட்டது , வாய் விரிந்து கெட்டது .
Blossoms open and die, your mouth opens and destroys you.
Explanation:
Blossoms fade away after opening fully , when the mouth opens , it
blurts out things that should not be said, and brings misery.


2. எரிகிற விட்டிலே பிடுங்கிறது லாபம்.Whatever you are able to secure from a burning house is a gain.

Explanation:
This proverb is typically aimed at people who typically take advantage
of some thing that's not theirs. A typical example would be the
middlemen who loot things which are donated for the disaster victims.


3.காடுப்பூனைகுச் சிவராத்ரி விரதமா ?Will a wild cat observe the fast of Sivaratri ?

Explanation:
There is no special occasion for wicked people to strike.


4.உழக்கு மிளகு கொடுப்பானேன் , ஒளிந்திருந்து மிளகு சாரு குடிப்பானேன் ?Why should he give a measure of pepper and drink the pepperbroth in
secret ?

Explanation:
A cup of black pepper is huge quantity of pepper which is enough to
prepare a feast and even after supplying so much pepper u get only
pepper water to drink , means after all the hardwork you have done you
have not been recogonized. This can be typically said when one person
does all the work to organize an event and some one else takes credit
for it.


5.சாதுரியப்பூனை மீன் இருக்க, புளியங்காயத் திங்கிறதாம்.The artful cat ate tamarind when there was fish.

Explanation:
The cat in the house ate tamarind when there was fish so that the
owner would leave the fish exposed without suspicion. This proverb is
typically used for people who have some thing in the mind but pretend
to do something else.



6. வெறும் வாய் மெல்லுகிற அம்மையாருக்கு அவல் அகப்பட்டது போல .It is like a bowl of Aval(Rice obtained from fried paddy by pestling it) given to a woman who has been chewing her empty mouth.

Explanation:
A proverb which describes sarcastically the joy that a woman finds in
a gossip.
" Arthur could not tame a woman s tongue."


7. பந்தியிலே வேண்டாம் வேண்டாம் என்றாலும் , இலை போத்தல் இலை போத்தல்
என்கிறான்.

Though I repeatedly refuse to take him to place where food was served,
he is constatly saying that there is holes in the Ilai (leaf plate).

Explanation:
This proverb is typically said of people who are not wanted at a
particular place, but they still don't care when others give a hint he
isn't wanted and go about criticising things around. Especially in
joint family there would be person who isn't good at anything but will
show of to every one as if he is a big person in the family to other
visitors in any function. This trend can be seen in lot of movies esp
where the hero's bother in law or heroines mom's brother is a good for
nothing character(Most of the times Vadivelu ends up in this role).


8. உழுகிற நாளில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தது
போல.

During the ploughing season he goes about visiting places, but returns
on time with his sickle for the harvest season.

Explanation:
This experience most of us would have had. Typically when people work
in group, say four people work for a project, there will be two who
work hard, one though he dosent work hard would always be with the
group and help them in any possible way and finally there will be a
person who is never present during the project. But that person would
be knocking the doors of the group members right before the project
submission to learn what he has to present the next day. The people
who dont share the hardwork but share the benifit of the hardwork.


9. கஞ்சி கண்ட இடம் கைலாசம் , சோறு கண்ட இடம் சொர்க்கம் .Any place which gives him rice-gruel is his Kailash, and whatever
place which gives him rice is his Heaven.

Explanation:
This proverb is directed at people who have no aim in their life.
Kailash or Siva Logam is place people reach after death. It is a great
boon to see Shiva. Heaven or Sorgam is place ruled by Indra and is
filled with pleasures. To attain Kailah or Heaven is a life time goal
or the highest aim of many people. But the lazy people consider its
heaven to get free food and never work hard.


10. சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது .The cat that has got fire burns will never go near the kitchen.

Explanation:
When you have any bad experience at all cost you will try to avoid
going through it once again.
"A burnt child dreads the Jire."
"Adversity makes a man wise, not rich."



11. குமரிக்கு ஒரு பிள்ளை , கோடிக்கு ஒரு வெள்ளை .
One child for a young girl and one white for a clothesline.
Explanation:

It just takes a little time for a change. Young girl is considered
young and innocent till the day she bears a child. From that day she
becomes a responsible mother. Similarly a clothes line with many
clothes will seem to look dull when one white cloth is put on it for
drying. The transient nature of all our lives.


12. வீட்டுக்கு செல்வம் மாடு , தொட்டச் செல்வம் முருங்கை.
The treasure of a house is a cow and treasure of a garden is Murungai
tree.

Explanation:
The cow gives milk which is used as milk,curd,ghee. The cow dung is
disinfectent and used to clean the floor. The cow dung was also used
as a combustion material and also for sacred ash. Similarly Murungai
gives Murungakai (drum stick), Murungai Keerai(edible green leaves)
and has various other medicinal properties. It is basically used to
show utilities of various kinds of a single source. Another very good
example is Vaalai maram(banana tree).


13. பெண்ணின் கோணல் , பொன்னிலே நிமிரும்
Unprettiness of a girl will be shielded by her gold ornaments.


Explanation:
Though a dig at most women, the proverb actually means if you dont
have substance it still can be adjusted with other things. In most
cases money is the other thing which sets most things right.  The
proverb is set in negative tone meaning that people who have influence
have their way.


14. தேரோட போச்சு திருநாளு , தாயோட போச்சு பிறந்த அகம்

When the procession of Temple car ends the festival ends, the support
from home ends with death of the mother.

Explation:
Its usually addressed to a daughter in law. Usually Mother in laws
acts tough towards the young daughter in laws and the girl seeks the
solace of her mother often. But this support last nly as long as her
mother lives. So its better to adjust with the hardship rather than
finding solace else where.



15. உயிரோடு இருக்கும்போது ஒரு கரண்டி நெய்க்கு வழி இல்லை, ஓமத்துக்கு ஒன்பது
கரண்டி நெய் விட்டது போல .
While he was alive they  couldn't not afford one spoonful of ghee, now
they spend nine spoons of ghee for the cermonial fire.

Explanation:
Addressed to people who cant afford thing but still do it to please
others. Here a family which couldnt afford a spoon of ghee now spends
nine spoons for the death cermony just to put a show to others and
please others who come for the cermony. Most marraiges in India are
done this way. When family cant afford much money they get loans and
arrange a grand marraige.
16. கைய பிடித்து கள்ளை வார்த்து , மயிரை பிடித்து பணம் வாங்குறதா ?
Kai pidithu kallai varthu, maiyirai pidithu panam vanguratha?
Is it right to offer toddy first in a friendly way and then hold the
hair and  take away all the money?

Explanation:
When help comes out of way be aware of it, it might end up in trouble.
Typically like the Nigerian scam where people get mails sayings you
have won lottery please send your bank account so that we can deposit
money. When people give the account number each and every penny from
their bank account is taken away. So id you get tempting offer out of
the way, refuse it!


17. ஆம்புடையான் செத்து அவதி படும் போது, அண்டை வீட்டுக்காரன் அக்குளிலே
பாய்ச்சுகிறான் !

Aambudayan sethu avathi padum ppthu, andai veetykkaran akkulile
paaichukiraan!
While the wife was sorrowing seeing her husband in deathbed, her
neighbour thrust his hand into her armpit arm-pit.

Explanation:
The man tries to took advantage of a women in an unprotected state.
Said about persons who take a mean advantage of another's misfortunes.


18. சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம் , அவள் இச்சம் பாயை
கட்டிகொண்டு எதிரே வந்தாளாம் .

Seelai illai endru sithi veetuku ponalaam, aval icham paaiyai
kattikondu vanthalam.
She went to her aunt's house since she had no saree but her aunt came
out wearing a rug!

Explanation:
From bad to worse, when you think you are in a bad state and wish to
live from mercy of some other person, you face the harsh reality that
every one is living in a bad state!


19. பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி , மேட்டிலே இருந்தா அக்கா !
Palathilae eruntha pondati, metile iruntha akka!
While they are in the valley he treats her as his wife, while on the
hill he treats her as his sister.

Explanation:
Said of People who have no moral values and take advantage of every
situation they can be undetected.
"Do in the hole as thou wouldn't do in the hall."


20. ஊரார் வீட்டு நெய்யே , என் பொண்சாதி கையே.
Urar veetu neiye, en pondati kaiye.
Though the ghee belonged to the village, it is  my wife's hand that is
serving the ghee.

Explanation:
A couple went to a village feast. The wife was helping out by serving
the ghee, when she was serving the ghee to her husband she poured more
amount that she has served any one else since its her husband and the
ghee is not theirs! Typically said to people who take advantage of the
power given to them and make most of it.

21. செல்லம் செரூக்குகிறதா ? வாசல் படி வழுக்கிறதா ?
Chellam serukkirathaa ? vaasal padi valukkirathaa?
Was it the unbound affection or the entrance to the house that made you slip?

Explanation:
Addressed to people who usually dont accept their mistake and put the blame on others. Happens typically with everyone, when we try to put blame on some other person so that we can escape from the mistakes we committed.
கடுகு களவும் களவுதான் , கற்புரம் களவும் களவு தான்.
Kadugu kalavum kalavuthaan, Karpooram kalavum kalavu thaan.
Theft is a theft ,be it stealing a mustard or  acamphor.

Explanation:
You cannot justify a crime by saying its very small crime.
" Sin is sin whether big or small."


22. இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?Indraikku ilai aruthavan naaliku kulai arukkamaattaanaa?
Won't the person who cut the leaves today , would cut the fruits tomorrow?

Explanation:
The idea is to cut down a mistake/crime in the beginning stage itself. One crime leads to another.
" He who hath done ill once will do it again."


23. கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
Koothadi kilake parthaan , koolikaran merke parthaan.
The dancer watched the east, the labourer watched the west.

Explanation:
The dancers perform all night long in festivals and wait for the sunrise(east) so that their payments will be made and can return home.  The labourer works all day long and see the west all the time since he would get his pay only at the sunset. The whole world works in the direction of money.


24. பாம்பாடிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .
Paambatikku pambile saavu, kallanukku kalavile saavu.
Death of snake charmer would be caused by his snake, death of a thief will be caused by his theft.
Explanation:

If you do a sin you cannot escape from it, it will follow you. This theme is explored by so many movies these days like Bheema and Pattiyal.
Retribution follows a person from his own wickedness.

25. கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
Kollum varaikkum kondatam, konda piragu thindaatam.
It's enjoyment till the marriage and its misery from then.

Explanation:
Relationship with girl will look sweet and attractive till marriage but once that happens, everything changes and you end having nothing but misery. Vice versa too!


26. துட்டு வந்து போட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொடியிலே விழுந்ததோ?
Thuttu vanthu potiyile vilunthatho, thitu vanthu potiyile vilunthatho.
Is it the money or the scoldings , that  go into the savings box?

Explanation:
At the end of the day the money earned is more important than the pains you go through to secure the money.
" Account not that work-slavery that brings in penny savory."

27. திருவாக்குக்கு எதிர்வாக்குக்கு உண்டா?
Thiruvaakkuku ethirvaakku unda?
Are there any words  which can go against God's words.

Explanation:
You cant stand against gods wish. This proverb is usually used to address powerful and influential men, whose word are usually the final one. No body would dare to go against it.


28. ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.
Ottai pannaiyilum sakarai erukkum.
Even a broken pot might contain sugar.

Explanation:
Dont ignore anything without thoroughly understanding it. Even the worst possible thing might have something good in it. Don't under estimate any one or any thing.


29. அறுப்புக்காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி .Arupukalathil elikku aainthu pensathi.
During the  harvest time a rat keeps five wives.

Explanation:
When a person who lives in poverty for most of his life , gets money he doesn't know how to handle it and would extravagantly spend it. In Tamil people usually say 'Parambarai Panakaran'- man who is wealthy for generations, just say he is born rich and not made rich. So there seems to be a difference between born rich and other rich people! On the other hand this proverb can also be used against people who uses others property. Typically watchmen in guest/holiday house , use the house like their own when the owner is not there.

30. பங்குனி என்று பருக்கிறதுமில்லை, சித்திரை என்றும் சிறுக்கிறுதுமில்லை.
Neither does he expand in March nor does he get lean in April.
Explanation:
Panguni(around March) in Tamil calendar is the month of big harvest.
Sithirai(April ) is a month where there is little profit. The proverb
is used of a man who dont change their behaviour with change in
seasons.

“A wise man is he who knows that prosperity and adversity are alike”
” He swells not in prosperity, and shrinks not in adversity .”

31. குறையச் சொல்லி , நிறைய அள.
Give more quantity with a lesser price
Explanation:
Typically people who purchase with street vendors will have this
experience. The example I give is of Masala Sundal you get in the
beach. You will ask Sundal for Rs.5 and vendor will measure some
quantity and put it in the paper cone and after doing that before
giving it to you for your statisfaction, he would add very very little
quantity of Sundal in paper cone to show that he has given more than
the customer asked for. So this proverb is to say that what ever you
do, give the quality and quantity right.
” Cheat me in the price, but not in the goods*”
“It is not a sin to sell dear, but it is to make ill measure.”

32. அஞ்சும் மூன்றும் உண்டானால் , அறியாப்பெண்ணும் சமைக்கும்.
If the five and the three are at hand, even an ignorant girl can cook.

Explanation:
It is easy to do a thing when one has all the help required.
The ‘five’ are pepper, salt, mustard, cumin and tamarind. The ‘three’
are water, fire and fuel.

33. அறைக்காசை ஆயிரம் பொன்னக்குகிறவளும் பெண்சாதி , ஆயிரம் பொன்னை அறைக்காசு
ஆக்கு கிறவளும் பெண்சாதி.

The one who is capable of converting half a coin into a thousand gold
coins is a wife, and the one who is capable of reducing a thousand
gold coins to half a coin is also a wife.

Explanation:
This why people say marriage is made in heaven. If you have a good
wife you have agood fortune, if you have a bad one you are doomed.
” All women are good : good for something or good for nothing.”

34. ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளில் சிரித்தான் , திருநாளும் வேறு
நாளாச்சுது .

When one who had never smiled, smiled on a sacred day, even the sacred
day became an ordinary day.
Or better :
ஒரு நாளுமில்லாமல் திருநாளுக்குப் போனால் , திருநாளும் வேரு
நாளாச்சுது.

When a man, who never attended a festival, attends one, even the
festival day becomes a common day.
Explanation:
This just goes to show how unluckly people are or how last minute
events spoils a long awaited day.

தமிழ்ப் பழமொழிகள்

  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  • அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
  • அகல இருந்தால் பகையும் உறவாம்.
  • அகல உழுகிறதை விட ஆழ உழு.
  • அகல் வட்டம் பகல் மழை.
  • அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
  • அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
  • அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
  • அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
  • அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
  • அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
  • அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
  • அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
  • அடக்கமே பெண்ணுக்கு அழகு.
  • அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
  • அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
  • அடாது செய்தவன் படாது படுவான்.
  • அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்
  • அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
  • அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
  • அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
  • அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.
  • அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
  • அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
  • அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
  • அந்தி மழை அழுதாலும் விடாது.
  • அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
  • அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
  • அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
  • அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.
  • அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
  • அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
  • அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.
  • அரசு அன்று கொல்லும்,தெய்வம் நின்று கொல்லும்.

  • அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
  • அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
  • அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது.
  • அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
  • அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
  • அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.
  • அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?
  • அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.
  • அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.
  • அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
  • அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.
  • அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.
  • அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.
  • அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை.
  • அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
  • அவனவன் செய்த வினை அவனவனுக்கு.
  • அழக் கொண்ட எல்லாம் அழப் போகும்.
  • அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.
  • அழச் சொல்லுவார் தமர்,சிரிக்கச் சொல்லுவார் பிறர்.
  • அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
  • அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.
  • அழுத பிள்ளை பால் குடிக்கும்.
  • அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
  • அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை.
  • அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்.
  • அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
  • அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
  • அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது.
  • அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
  • அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரி
  • அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
  • அறச் செட்டு முழு நட்டம்.
  • அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
  • அறமுறுக்கினால் அற்றுப் போகும்.
  • அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
  • அறிய அறியக் கெடுவார் உண்டா?
  • அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
  • அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
  • அறிவீனனிடம் புத்தி கேட்காதே.
  • அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
  • அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
  • அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.
  • அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.
  • அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
  • அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?
  • அற்ப அறிவு அல்லலுக்கு இடம்.
  • அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
  • அற்ப சகவாசம் பிராண சங்கடம்.
  • அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
  • அற்றது பற்றெனில் உற்றது வீடு.
  • அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
  • அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
  • அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
  • அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.
  • அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.
  • அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
  • அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

     

  • ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
  • ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
  • ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
  • ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
  • ஆசை வெட்கம் அறியாது.
  • ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.
  • ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
  • ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமா.
  • ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
  • ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
  • ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா
  • ஆயிரங்காலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
  • ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
  • ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே
  • ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
  • ஆரால் கேடு, வாயால் கேடு.
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
  • ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
  • ஆழமறியாமல் காலை இடாதே.
  • ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
  • ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
  • ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
  • ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
  • ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
  • ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
  • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  • ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
  • ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
  • ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
  • ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
  • ஆனைக்கும் அடிசறுக்கும்.
  • ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
  • ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே

       இ, ஈ

  • இக்கரைக்கு அக்கரை பச்சை.
  • இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
  • இஞ்சி இலாபம் மஞ்சளில்.
  • இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
  • இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
  • இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
  • இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
  • இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
  • இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
  • இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.
  • இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
  • இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
  • இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
  • இராச திசையில் கெட்டவணுமில்லை
  • இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
  • இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
  • இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
  • இருவர் நட்பு ஒருவர் பொறை.
  • இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
  • இல்லது வாராது; உள்ளது போகாது.
  • இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
  • இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
  • இளங்கன்று பயமறியாது
  • இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
  • இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
  • இறங்கு பொழுதில் மருந்து குடி
  • இறுகினால் களி , இளகினால் கூழ்.
  • இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
  • இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
  • இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
  • இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?
  • ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
  • ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
  • ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
  • ஈர நாவிற்கு எலும்பில்லை.
  • ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.

      உ, ஊ

  • உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
  • உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
  • உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
  • உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
  • உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
  • உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.
  • உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
  • உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
  • உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
  • உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
  • உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
  • உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை
  • உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
  • உப்​பைத் தின்​ற​வன் தண்​ணீர் குடிப்பான்
  • உரம் ஏற்றி உழவு செய்
  • உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
  • உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
  • உலோபிக்கு இரட்டை செலவு.
  • உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
  • உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
  • உளவு இல்லாமல் களவு இல்லை.
  • உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
  • உள்ளது போகாது இல்லது வாராது.
  • உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
  • உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.
  • உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]
  • ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும்
  • ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
  • ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
  • ஊண் அற்றபோது உடலற்றது.
  • ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
  • ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
  • ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
  • ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
  • ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.

      எ, ஏ

  • எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
  • எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
  • எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
  • எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
  • எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்!
  • எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது.
  • எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்ந்தென்ன?
  • எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
  • எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!
  • எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
  • எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்.
  • எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
  • எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
  • எண்ணெய் முந்துதோ திரி முந்துதோ?
  • எதார்த்தவாதி வெகுசன விரோதி.
  • எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
  • எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
  • எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
  • எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
  • எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
  • எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
  • எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
  • எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
  • எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
  • எலி அழுதால் பூனை விடுமா?
  • எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
  • எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
  • எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
  • எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
  • எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
  • எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
  • எல்லாரும் கூடிக் குல்லாய் போட்டனர்!
  • எல்லாரும் தடுக்கின்கீழ் நுழைந்தால், இவள் கோலத்தின் கீழ் நுழைந்ததைப் போல்!
  • எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
  • எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
  • எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
  • எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
  • எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
  • எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
  • எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
  • எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
  • எறும்பு ஊரக் கல்லுந் தேயும்.
  • எறும்புந் தன் கையால் எண் சாண்
  • ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
  • ஏரி நிறைந்தால் கரை கசியும்.
  • ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
  • ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
  • ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
  • ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
  • ஏழை என்றால் எவர்க்கும் எளிது
  • ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
  • ஏழைக்கு இரக்கப்பட்டா நாளைக்கு இருக்க மாட்டோம்
  • ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.

        ஐ, ஒ, ஓ, ஒள

  • ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
  • ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா? (சிறிய வயதில் தான், நன்கு கற்க முடியும்)
  • ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
  • ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?
  • ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம்.
  • ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
  • ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
  • ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
  • ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
  • ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
  • ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
  • ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
  • ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
  • ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
  • ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
  • ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
  • ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
  • ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
  • ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
  • ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
  • ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
  • ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
  • ஓடி ஒரு கோடி தேடுவதிலும், இருந்து ஒரு காசு தேடுவது நலம்
  • ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
  • ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
  • ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்!
  • ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
  • ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்
  • ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது!
  • ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
  • ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
  • ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
  • ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
  • ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

     

  • கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
  • கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
  • கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
  • கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
  • கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
  • கடல் திடலாகும், திடல் கடலாகும்.
  • கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
  • கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
  • கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
  • கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
  • கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
  • கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
  • கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
  • கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
  • கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
  • கடுகு களவும் களவுதான் , கற்புரம் களவும் களவு தான்.
  • கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
  • கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
  • கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்
  • கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
  • கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
  • கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
  • கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
  • கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
  • கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.
  • கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
  • கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
  • கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை!
  • கண் கண்டது கை செய்யும்.
  • கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
  • கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
  • கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
  • கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
  • கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
  • கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
  • கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது
  • கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு
  • கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்
  • கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
  • கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே
  • கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
  • கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி
  • கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
  • கம்பால சாய்க்காதவனைக் கயிற்றால சாய்த்த கதையாக
  • கரணம் தப்பினால் மரணம்.
  • கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
  • கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
  • கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
  • கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
  • கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
  • கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்
  • கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
  • கல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
  • கல்லாதவரே கண்ணில்லாதவர்.
  • கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
  • கல்வி அழகே அழகு.
  • கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
  • கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.
  • கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
  • களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
  • கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
  • கள்ள மனம் துள்ளும்.
  • கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
  • கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
  • கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
  • கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
  • கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
  • கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
  • கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
  • கன்னுக்குட்டிக்கு தெரியுமா, கவணையோட உயரம்?
  • கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
  • கனிந்த பழம் தானே விழும்.
  • கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
  • கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.

      கா

  • காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
  • காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
  • காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
  • காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
  • காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
  • காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
  • காணி ஆசை கோடி கேடு.
  • காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
  • காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
  • காப்பு சொல்லும் கை மெலிவை.
  • காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
  • காய்த்த மரம் கல் அடிபடும்.
  • காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
  • காரண குருவே காரிய குரு!
  • காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
  • காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
  • கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
  • காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
  • காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
  • காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்!
  • காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
  • காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
  • காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
  • காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!
  • காற்றில்லாமல் தூசி பறக்குமா?
  • காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
  • காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

      கி, கீ, கு, கூ

  • கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!
  • கிட்டாதாயின் வெட்டென மற
  • கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
  • கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
  • கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி
  • கீர்த்தியால் பசி தீருமா?
  • கீறி ஆற்றினால் புண் ஆறும்.
  • குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
  • குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
  • குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
  • குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
  • குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
  • குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
  • குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
  • குணத்தை மாற்றக் குருவில்லை.
  • குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
  • குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
  • குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
  • குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
  • குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
  • குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
  • குப்பை உயரும் கோபுரம் தாழும்.
  • குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
  • குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
  • குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
  • குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
  • குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
  • குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
  • குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
  • குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
  • குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
  • குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
  • குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
  • கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
  • குரங்கின் கைப் பூமாலை.
  • குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
  • குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம்
  • குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
  • கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
  • கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
  • கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
  • கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
  • கூழும் சிந்தல, கோப்பையும் உடையல
  • கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.

      கெ

  • கெடுக்கினும் கல்வி கேடுபடாது
  • கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
  • கெடுவான் கேடு நினைப்பான்
  • கெட்டாலும் செட்டி செட்டியே,கிழிந்தாலும் பட்டு பட்டே.

  • கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
  • கெட்டும் பட்டணம் சேர்
  • கெண்டையைப் போட்டு வராலை இழு.
  • கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
  • கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.

       கே

  • கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
  • கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே!
  • கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
  • கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
  • கேள்விப் பேச்சு மூளா நெருப்பு

       கை

  • கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
  • கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
  • கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன்
  • கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
  • கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
  • கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
  • கையிலே காசு வாயிலே தோசை
  • கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
  • கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
  • கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்

      கொ

  • கொஞ்சம் கொஞ்சமாக் குடைஞ்சா குடகு மலையையும் குடைஞ்சிடலாம்
  • கொடிக்கு காய் கனமா?
  • கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
  • கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
  • கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
  • கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
  • கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
  • கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
  • கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
  • கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
  • கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
  • கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
  • கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.

        கோ

  • கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
  • கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
  • கோடி வித்தையும் கூழுக்குத்தான்
  • கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
  • கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
  • கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
  • கோபம் சண்டாளம்.
  • கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச் சுவர் என்ன பிரமாதம்!
  • கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
  • கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
  • கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
  • கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
  • கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
  • கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.

        ச, சா, சி, சீ

  • சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால், பொன்பாளம் வந்தாலும் வரும்; மண்பாளம் வந்தாலும் வரும்!
  • சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
  • சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
  • சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
  • சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
  • சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா
  • சர்க்கரை என்றால் தித்திக்குமா?
  • சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.
  • சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
  • சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
  • சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
  • சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
  • சாண் ஏற முழம் சறுக்கிறது.
  • சாது மிரண்டால் காடு கொள்ளாது.
  • சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.
  • சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
  • சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.
  • சிறுதுளி பெரு வெள்ளம். 
  • சு, சூ
  • சுக துக்கம் சுழல் சக்கரம்.
  • சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
  • சுட்ட சட்டி அறியுமா சுவை.
  • சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
  • சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.
  • சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
  • சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
  • சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே
  • சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
  • சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
  • சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
  • சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
  • சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.
  • சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.

       செ, சே, சை

  • செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
  • செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
  • செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?
  • செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
  • செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
  • செயவன திருந்தச் செய்.
  • செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
  • செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
  • செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
  • சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
  • சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
  • சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
  • சேற்றிலே செந்தாமரை போல.
  • சைகை அறியாதவன் சற்றும் அறியான்.

        சொ, சோ

  • சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
  • சொல் அம்போ வில் அம்போ?
  • சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
  • சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
  • சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
  • சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
  • சொல்வல்லவனை வெல்லல் அரிது.
  • சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
  • சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
  • சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
  • சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
  • சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..
  • சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.
         
  • தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
  • தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
  • தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
  • தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
  • தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
  • தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
  • தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
  • தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
  • தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் .
  • தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
  • தந்தையோடு கல்விபோம்; தாயோடு அறுசுவை உண்டிபோம்.(பெற்றோர் தரும் கல்வியும், உணவுமே சிறந்தவை)
  • தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை. (அப்பா கூறும் அறிவுரைகளே, அறங்களில் உயர்ந்தவை ஆகும்.)
  • தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
  • தருமம் தலைகாக்கும்.
  • தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
  • தலை இருக்க வால் ஆடலாமா ?
  • தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
  • தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
  • தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
  • தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
  • தவளை தன் வாயாற் கெடும்.
  • தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்
  • தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும்!

      தா

  • தாண்டி குதிக்குமாம் மீனு. தயாரா இருக்குமாம் எண்ணெய் சட்டி!
  • தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்
  • தாய்வீடு ஓடிய பெண்ணும் பேயோடு ஓடிய கூத்தும் ஒன்று
  • தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை. (அம்மாவை விட, சிறந்த தெய்வம் எங்கும் இல்லை)
  • தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்
  • தானத்தில் சிறந்தது நிதானம்
  • தானிருக்கும் அழகுக்குத் தடவிக்கொண்டாளாம் வேப்பெண்ணெய்

       து

  • துட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ?
  • துணிகிறவருக்கு வெட்கம் இல்லை; அழுகிறவருக்கு துக்கம் இல்லை 
  • தை பிறந்தால் வழி பிறக்கும்
  • தை மாதம் போட்ட விதை தண்ணீரில்லாமல் வளரும்

     

  • நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.
  • நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.
  • நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
  • நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !
  • நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.
  • நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்
  • நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.
  • நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
  • நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
  • நயத்திலாகிறது பயத்திலாகாது.
  • நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
  • நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
  • நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.
  • நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்.
  • நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.
  • நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?
  • நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.
  • நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
  • நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.

      நா

  • நா அசைய நாடு அசையும்.
  • நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
  • நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ?
  • நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.
  • நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.
  • நாய் இருக்கிற சண்டை உண்டு.
  • நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை.
  • நாய் விற்ற காசு குரைக்குமா?
  • நாலாறு கூடினால் பாலாறு.
  • நாள் செய்வது நல்லார் செய்யார்.
  • நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.
  • நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.

       நி, நீ

  • நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
  • நித்திய கண்டம் பூரண ஆயிசு.
  • நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?
  • நித்திரை சுகம் அறியாது.
  • நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
  • நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.
  • நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.
  • நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.
  • நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.
  • நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
  • நீர் மேல் எழுத்து போல்.
  • நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
  • நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.

       நு, நூ, நெ, நே, நை, நொ, நோ

  • நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
  • நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.
  • நூல் கற்றவனே மேலவன்.
  • நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
  • நூற்றைக் கொடுத்தது குறுணி.
  • நெய் முந்தியோ திரி முந்தியோ.
  • நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
  • நெருப்பு என்றால் வாய்வெந்து போமா?
  • நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?
  • நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.
  • நேற்று உள்ளார் இன்று இல்லை.
  • நைடதம் புலவர்க்கு ஒளடதம்.
  • நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
  • நொறுங்கத் தின்றால் நூறு வயது.
  • நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.
  • நோய் கொண்டார் பேய் கொண்டார்.
  • நோய்க்கு இடம் கொடேல்.

     

  • துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.
  • பகைவர் பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
  • பகுத்தறியாமல் உறவு புகை எழு நெருப்பு.
  • பக்கச் சொல் பதினாயிரம்.
  • பசியுள்ளவன் ருசி அறியான்.
  • பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்
  • பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.
  • பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
  • பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
  • படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
  • படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
  • படையிருந்தால் அரணில்லை.
  • படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
  • பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
  • பட்டவருக்கு பலன் உண்டு; பதவியும் உண்டு!
  • பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
  • பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
  • பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
  • பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
  • பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
  • பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.
  • பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
  • பணம் உண்டானால் மணம் உண்டு.
  • பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
  • பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
  • பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
  • பதறாத காரியம் சிதறாது.
  • பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
  • பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
  • பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
  • பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
  • பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
  • பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
  • பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
  • பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
  • பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
  • பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.
  • பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
  • பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
  • பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.
  • பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
  • பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
  • பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
  • பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
  • பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
  • பனை மரத்து நிழல்ல பாய விரிச்சு படுத்த மாதிரி பாடா படுத்துது! நிழலும் ஒரு அடி. நிம்மதியும் அதுக்குள்ளே
  • பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
  • பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி. 
  • பாம்பு தின்கிற ஊர் போனால், நடுமுறி தமக்கு என்று இருக்க வேண்டும்!
  • பாம்பின கால் பாம்பறியும்.
  • பாம்பாடிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .

        பு, பூ

  • புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
  • புத்திமான் பலவான்.
  • புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
  • புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
  • பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
  • பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
  • பூவிற்றகாசு மணக்குமா?
  • பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.

       பெ, பே

  • பெட்டைக் கோழி எட்டிக் கொத்தாது
  • பெண் என்றால் பேயும் இரங்கும்.
  • பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
  • பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
  • பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
  • பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
  • பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
  • பெருமை ஒருமுறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை!
  • பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
  • பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
  • பேசப் பேச மாசு அறும்.
  • பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
  • பேராசை பெருநட்டம்.
  • பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்

       பொ, போ

  • பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
  • பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
  • பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
  • பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.
  • பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
  • பொறுமை கடலினும் பெரிது.
  • பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
  • பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
  • போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
  • போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
  • போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.

     

  • மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கனும்.
  • மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
  • மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
  • மண் குதிர்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
  • மண்டையுள்ள வரை சளி போகாது.
  • மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
  • மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
  • மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுமா?
  • மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
  • மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.
  • மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
  • மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
  • மருந்தே யாயினும் விருந்தோடு உண்.
  • மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.
  • மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கர்ப்பூரம் .
  • மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
  • மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்
  • மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
  • மவுனம் கலக நாசம்
  • மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.
  • மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
  • மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.
  • மனமுரண்டிற்கு மருந்தில்லை.
  • மனம் உண்டானால் இடம் உண்டு.
  • மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
  • மனம் போல வாழ்வு.
  • மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி.
  • மண்னுயிரை தன்னுயிர்போல் நினை.

       மா

  • மாடம் இடிந்தால் கூடம்.
  • மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
  • மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?
  • மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.
  • மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
  • மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
  • மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
  • மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.
  • மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
  • மாரடித்த கூலி மடி மேலே.
  • மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
  • மாரி யல்லது காரியம் இல்லை.
  • மாவுக்குத் தக்க பணியாரம்.
  • மாற்றானுக்கு இடங் கொடேல்.
  • மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
  • மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.

      மு

  • முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும். (பெற்றோர் வழிதான், குடும்பம் செல்லும்.)
  • முடிச்சு போட்டு பேசறவங்க, முட்டாள்.( நன்கு அறியாமல் பேசக்கூடாது.)

      யா

  • யானை படுத்தால் குதிரை உயரம் (அதனால், யானையாக எழுந்து நில் என்ற பொருள்).
  • யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை.
  • யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.
  • யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
  • யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ?

      மி, மீ, மு, மூ

  • மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
  • மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
  • மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
  • மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
  • மீ தூண் விரும்பேல்.
  • முகத்துக்கு முகம் கண்ணாடி
  • முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
  • முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
  • முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா
  • முதல் கோணல் முற்றுங் கோணல்
  • முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.
  • முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
  • முருங்கை பருத்தால் தூணாகுமா?
  • முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.
  • முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
  • முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
  • முன் ஏர் போன வழிப் பின் ஏர்
  • முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
  • முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
  • முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
  • முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்
  • முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு
  • மூட கூட்டுறவு முழுதும் அபாயம்.
  • மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.
  • மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்.

      மெ, மே, மொ, மோ,மெள

  • மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
  • மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.
  • மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்
  • மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.
  • மொழி தப்பினவன் வழி தப்பினவன்
  • மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.
  • மெளனம் மலையைச் சாதிக்கும்.

      வ-வே

  • வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
  • வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
  • வடக்கே கருத்தால் மழை வரும்.
  • வட்டி ஆசை முதலுக்கு கேடு.
  • வணங்கின முள் பிழைக்கும்.
  • வந்த விதி வந்தால் வாய் திறக்க வழியிருக்காது!
  • வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!
  • வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
  • வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும்.
  • வருந்தினால் வாராதது இல்லை.
  • வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
  • வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
  • வல்​லான் வகுத்​ததே வாய்க்​கால்
  • வளவனாயினும் அளவறிந் தளித்துண்
  • வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும்.
  • வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
  • வழி வழியாப் போகும்போது விதி விதியா வருது
  • வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்
  • வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
  • வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
  • வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
  • வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
  • வாழ்வும் தாழ்வும் சில காலம்.
  • விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
  • விரலுக்குத் தகுந்த வீக்கம்.
  • விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா, விறகால ரெண்டு போடு
  • விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
  • விதி எப்படியோ மதி அப்படி.
  • வித்தைக்கு அழிவில்லை.
  • வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
  • விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
  • விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
  • வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
  • விலை மோரில் வெண்ணை எடுத்துத் தலைச்சனுக்குக் கல்யாணம் செய்வாளாம்
  • விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
  • விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
  • விளையும் பயிர் முளையிலே தெரியும்.
  • வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்
  • வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
  • வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
  • வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல .
  • வெளுத்ததெல்லாம் பாலல்ல.
  • வேலிக்கு ஓணான் சாட்சி.
  • வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு
  • வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!

அந்தச் சூரியன் கூட..!






  அந்தச் சூரியன் கூட..!

மாலை வேளையில்
உன்னழகைக் கண்டதால்தானோ
என்னவோ..!
அந்தச் சூரியன் கூட
வெட்கத்தால் சிவந்து
மேகத்தினுள் மறைந்து விட்டான்..!